அதற்கு கடை ஊழியர்கள் செய்தியாளரிடம் எங்களது கடையில் இப்படித்தான் இருக்கும் என்றும் நாங்கள் காலையில் உள்ள பிரியாணியை மதியம் சூடாக்கி தான் தருவோம் என்றும் விருப்பம் இருந்தால் சாப்பிடுங்கள் இல்லை என்றால் செல்லுங்கள் என்று தெரிவித்துள்ளார். மன வருத்தத்துடன் வெளியே வந்த செய்தியாளர் இது பற்றி புகார் அளிக்க உணவு பாதுகாப்பு துறை அதிகாரிக்கு தெரிவித்தார், அப்போது உணவு பாதுகாப்பு துறை அதிகாரி புகாரை ஆன்லைனில் பதிவு செய்யுங்கள் என்றும் அப்போதுதான் நாங்கள் வர முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.
செய்தியாளரும் புகாரை ஆன்லைனில் பதிவு செய்துள்ளார். மறுநாள் அந்த உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு செய்தியாளர் புகார் பற்றிய நிலவரத்தை கேட்டுள்ளார், அதற்கு அதிகாரி நீங்கள் ஆன்லைனில் புகார் அளித்து விட்டீர்கள். அந்தப் புகார் எங்களிடம் வந்த பிறகு நாங்கள் பார்ப்போம் என்றும் அதுவரைக்கும் நீங்கள் எங்களை தொடர்பு கொள்ள வேண்டாம் என்றும் தெரிவித்து தொலைபேசி இணைப்பை துண்டித்து விட்டார்.
செய்திகளை மக்களுக்கு கொண்டு செல்லும் செய்தியாளருக்கு இந்த நிலைமை என்றால் சராசரி பாமர மக்களின் நிலைமை என்ன? இதற்கு உணவு பாதுகாப்புத் துறை அமைச்சர் மற்றும் தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக