தொழிற்கல்வி ஆசிரியர் கூட்டமைப்பின் மதுரை மாவட்ட நிர்வாக குழு கூட்டம். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 25 செப்டம்பர், 2023

தொழிற்கல்வி ஆசிரியர் கூட்டமைப்பின் மதுரை மாவட்ட நிர்வாக குழு கூட்டம்.

photo_2023-09-25_19-52-44

வேலூர் மாவட்டம்  காட்பாடி தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கூட்டமைப்பின் மதுரை மாவட்ட நிர்வாக குழு கூட்டம் 24.09.2023 மதுரை மூட்டா அலுவலகத்தில் நடைபெற்றது இந்த கூட்டத்திற்கு மதுரை மாவட்ட தலைவர் எம் ரெங்கராஜன் தலைமை தாங்கினார்.

மகளிர் அணி அமைப்பாளர் பரிமளக்கண் வரவேற்று பேசினார்.  மதுரை மாநகராட்சி ஆசிரியர் நலச்சங்க தலைவர் சி முருகன் வாழ்த்தி பேசினார். தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகத்தின் மாநிலத் தலைவர் செ.நா.ஜனார்த்தனன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.


அப்போது அவர் கூறியதாவது.. மெல்ல கற்கும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு மாநில திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் மாநில கல்வி ஆராய்சி நிறுவனத்துடன் இணைந்து பல்வேறு திறன்களை வளர்க்கும் விதமாக பாடதிட்டங்கள் மாற்றியமைத்து தொழிற்சாலைகளில் இணைந்து பயிற்சி அளித்து சான்றிதழ் வழங்கும் திட்டம் மகிழ்ச்சி அளிக்கிறது தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவிக்கின்றோம் அதே வேளையில் பணிஓய்வு பெறும் தொழிற்கல்வி ஆசிரியர் பணியாற்றும் பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப்பிரிவுகளை மூடுவது இப்பிரிவு மாணவர்களை வெகுவாக பாதிக்கும் எனவே இப்பாடப்பிரிவுகளை தமிழ்நாடு அரசு மூடக்கூடாது என வேண்டுகின்றோம்.  


மேலும் மாநிலம் முழுவதும் காலியாக இருக்க கூடிய 1000க்கும் மேற்பட்ட தொழிற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை மெல்ல கற்கும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு நிரப்பிட வேண்டுகின்றோம்.  என்றார்.


பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன

  1. தொகுப்பூதிய காலத்தினை கணக்கிட்டு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் தீர்ப்பினை நடைமுறைப்படுத்தியும் தமிழ்நாடு அரசு உடனடியாக வழக்கு தொடர்ந்த வழக்கு தொடராத பணி நிறைவு பெற்ற பணியில் இருக்கும் தொழிற்கல்வி ஆசிரியர்கள் அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்க அரசாணை வெளியிட வேண்டுகிறோம். மேலும் ஏற்கனவே வெளியிடப்பட்ட அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள 563 ஆசிரியர்களுக்கான பட்டியலை உடனே வெளியிட வேண்டுகிறோம்.
  2. தொழிற்கல்வி ஆசிரியராக பணியாற்றி முதுகலை வணிகவியல் ஆசிரியராக சென்ற காரணத்தினால் அவர்களுக்கு வழங்கப்பட்ட ரூ.5400/- தேர்வு நிலை  தர ஊதியத்தினை குறைத்து தமிழ்நாடு மாநில கணக்காயர் கூறியுள்ள  தெளிவுரைக்கு அவர்களுடைய ஊதியம் குறைக்கப்படாமல் வழங்குவதற்கான தெளிவுரை வழங்கிடுமாறு தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் மற்றும் பள்ளிக்கல்வி இயக்குனர் தொழிற்கல்வி இணை இயக்குனர் ஆகியோருக்கு வேண்டுகோள் விடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
  3. தமிழகத்தில் மூன்று முறை சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு நிலுவையில் இருக்கக்கூடிய 171 பகுதி நேர தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு முறையான காலம் வரை ஊதியம் வழங்கி ஆணை வழங்கிடுமாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
  4. மெல்ல கற்கும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் தொழிற்கல்வி பாடப் பிரிவினை நடைமுறைப்படுத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
  5. தமிழகம் முழுவதும் மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக இருக்கக்கூடிய ஆயிரம் தொழிற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
  6. பணிஓய்வு பெறும் தொழிற்கல்வி ஆசிரியர் பணியாற்றும் பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப்பிரிவுகளை மூடுவது இப்பிரிவு மாணவர்களை வெகுவாக பாதிக்கும் எனவே இப்பாடப்பிரிவுகளை தமிழ்நாடு அரசு மூடக்கூடாது என அரசை வேண்டுகின்றோம்.

முடிவில் ஆசிரியை விஜயலட்சுமி நன்றி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad