சேத்தியாத்தோப்பு அருகே பின்னலூரில் வேகத்தடை அமைக்கக்கோரி சாலையை மறித்த கிராம மக்கள். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 11 செப்டம்பர், 2023

சேத்தியாத்தோப்பு அருகே பின்னலூரில் வேகத்தடை அமைக்கக்கோரி சாலையை மறித்த கிராம மக்கள்.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே சென்னை- கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் பின்னலூர் கிராமம் உள்ளது..இந்த கிராமத்தில் இரண்டு இடங்களில் ஆபத்தான பகுதி என்று ஏற்கனவே நெடுஞ்சாலை துறை சாலையில் வேகத்தடைஅமைத்திருந்தது.இதனால் பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், நூற்றுக்கணக்கான வாகனங்கள் போன்றவை வேகத்தடை பகுதியை கடக்கும் போது விபத்தில்லாமல் கடந்து சென்றனர். 


முக்கியமாக இரண்டு வேகத்தடை அமைந்த பகுதிகளிலும் குடியிருப்புகள், அரசுப் பள்ளிகள் போன்றவை உள்ளது.  இப்பகுதியில் கடந்த சில நாட்களாக புதியதாக சாலையை பராமரிக்கும் பணிகள் நடைபெற்று வந்தபோது ஏற்கனவே இருந்த வேகத்தடையை மறைத்து சமப்படுத்தி சாலை போடப்பட்டுள்ளதால் தற்போது விபத்துக்கள் ஏற்படும் அபாய நிலை உள்ளது. பராமரிப்பு பணி செய்யும் போதே இதை கிராமத்தினர் சுட்டிக்காட்டியும் வேகத்தடை அமைப்பது தவிர்க்கப்பட்டது என பின்னர் கிராம மக்கள் கூறுகின்றனர்.ருக்கிறது அதிகம் ஏற்பட்டு வருகிறது. 


இதனால் அப்பகுதி மக்கள்  அதே இடத்தில்  வேகத்தடை அமைத்து விபத்துக்களை தவிர்க்கவேண்டும் எனக் கூறி சாலையில் இரு சக்கர வாகனம் சில காய்ந்தபனை மரங்கள் எனப் போட்டு சாலையை மறித்து தங்கள் கோரிக்கையின் அவசியத்தை பற்றிவலியுறுத்தினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/