சோழவந்தான் அருகே அதிமுக இளைஞர் இளம் பெண் பாசறை உறுப்பினர் சேர்க்கை முகாம் மாவட்ட செயலாளர் ஆர் பி உதயகுமார் தலைமையில் நடைபெற்றது. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 27 செப்டம்பர், 2023

சோழவந்தான் அருகே அதிமுக இளைஞர் இளம் பெண் பாசறை உறுப்பினர் சேர்க்கை முகாம் மாவட்ட செயலாளர் ஆர் பி உதயகுமார் தலைமையில் நடைபெற்றது.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியம் கச்சிராயிருப்பு கிராமத்தில் அதிமுக புறநகர் மேற்கு மாவட்ட இளைஞர் இளம்பெண் பாசறை உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் தலைமை வகித்தார். மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் ஆர் பி உதயகுமார் சிறப்புரையாற்றி முகாமை தொடங்கி வைத்தார்.


அதிமுகவின் ஒன்றிய அவைத் தலைவர் முனியாண்டி வரவேற்றார். ஒன்றிய செயலாளர்கள் வாடிப்பட்டி வடக்கு காளிதாஸ், செல்லம்பட்டி எம்.வி.பி. ராஜா, மதுரை மேற்கு தெற்கு அரியூர் ராதாகிருஷ்ணன் மாவட்ட கவுன்சிலர் அகிலா ஜெயக்குமார் யூனியன் சேர்மன் மகாலட்சுமி ராஜேஷ் கண்ணா, மருத்துவர் அணி கருப்பட்டி கருப்பையா ஒன்றிய கவுன்சிலர்  ராமலிங்கம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மாணிக்கம், தமிழரசன், சோழவந்தான் பேருர்செயலாளர் முருகேசன் பேரூர் கவுன்சிலர் சண்முக பாண்டியராஜா, அம்மா பேரவை வெற்றிவேல் இளைஞர் அணி கேபிள் மணி குருவித்துறை பாபு மேலக்கால் காசிலிங்கம் மற்றும் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட கிளை நிர்வாகிகள் இளைஞர் இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகள் மகளிர் அணியினர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/