புவனகிரி அருகேஉடைந்து வழிந்தோடும் குடிநீர் பைப்.. யாரும் கண்டு கொள்ளாமல் செல்லும்போது அக்கரையோடுஅரை நிமிடத்தில் சரி செய்த சிறுவர்கள். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 13 செப்டம்பர், 2023

புவனகிரி அருகேஉடைந்து வழிந்தோடும் குடிநீர் பைப்.. யாரும் கண்டு கொள்ளாமல் செல்லும்போது அக்கரையோடுஅரை நிமிடத்தில் சரி செய்த சிறுவர்கள்.

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே வால்கரைமேடு பகுதி உள்ளது. இங்கு சாலையோரமாக குடிநீர் பைப்  உடைப்பு ஏற்பட்டு ஒரு வார காலமாக  தண்ணீர் விரயமாகி திடலில் ஓடிக்கொண்டிருந்தது. இதனை யாரும் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை. இதைப் பலரும் வேடிக்கை பார்த்தவாறு மட்டுமே சாலையில் சென்ற வண்ணம் இருந்தனர். இந்நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த விளையாடச் சென்ற சிறுவர்கள் உடைந்த போன பைப்பை அருகில்  வந்து பார்த்தனர். 

தண்ணீர் விரயமாவதை தடுப்பதற்கு என்ன செய்யலாம் என்று யோசித்த அவர்கள் உடனடியாக அருகில் உடைந்து கிடந்த பிளாஸ்டிக் பைப்பை எடுத்து ஏற்கனவே தண்ணீரில் ஊறி ஈரமாகி சொத சொதப்பான களிமண்தரையில் பிளாஸ்டிக் பைப்பை ஓரிரு முறை ஓங்கிக் குத்தியதால் பைப்பிற்குள் கலி மண்நிரம்பி விட்டது, அதன் மறுபக்கத்தை தண்ணீர் விரயமாகிக் கொண்டிருந்த பைப்பில் பொருத்தினர். அதிசயம் என்னவென்றால் ஆர்டீசியன் ஊற்று போல் பொங்கி மேலே வந்த தண்ணீர் உடனடியாக கட்டுப்படுத்தப்பட்டது.இதனால் தண்ணீர் விரயமாகி அருகிலுள்ள திடல் முழுவதும் நிரம்பியநீர் தடுக்கப்பட்டது. 


இதை சரி செய்யும்பொறுப்பில் உள்ளவர்கள் இதை சரிப்படுத்த முயலாத நிலையில் சிறுவர்களின் இந்த சமயோசிதமான செயல்பாடு பலரையும் வியக்க வைத்தது. அரை நிமிடத்தில் தண்ணீர் விரயம் ஆவதை தடுத்து நிறுத்திய சிறுவர்களின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. மேலும் இப்பகுதிகளில் குடிநீர் பைப் லைனை சரியான முறையில் பராமரிப்பு பணிகள் செய்து தண்ணீர் விரயமாவதை தடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/