கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே பின்னலூர் கிராமத்தில் மிராளூர் கிராமத்திற்க்கு செல்லும் சாலை ஓரமாக ஏரி கரைப்பகுதியில் ஸ்ரீ வீரனார், ஸ்ரீ சப்த கன்னிகள் ஆலயம் அமைந்துள்ளது. இந்நிலையில் மர்மநபர்கள் கோவிலின் உள்ளே நுழைந்து உண்டியலை உடைத்து அதிலிருந்து பணத்தை எடுத்துச் சென்றனர்.
மேலும் கோவிலில் இருந்த குத்துவிளக்கையும் எடுத்துச் சென்று அருகில் உள்ள வாய்க்காலில் போட்டுச் சென்றுள்ளனர். இதுபோலவே கோவில் கோபுரத்தின் மேல் இருந்த கலசத்தினை கழட்டிய மர்ம நபர்கள் அதில் ஏதும் இல்லாததால் கோவில் கலசத்தை மேலேயே வைத்து சென்றுள்ளனர். இந்நிலையில் இது குறித்து கோவில் நிர்வாகத்தினர் அளித்த புகாரின் பேரில் சேத்தியாத்தோப்பு போலீசார் வழக்கு பதிந்து மர்மநபர்களை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும்பரபப்பை ஏற்படுத்தி வருகிறது. முக்கியமாக இந்த கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்று சில நாட்களையே கடந்திருப்பதால் இச்சம்பவம் கிராமத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக