மதுரை அதிமுகவின் பூத் கமிட்டி கூட்டம் பொதும்பு, அதலை, அரியூர் ஆகிய பகுதி நடைபெற்றது. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 28 செப்டம்பர், 2023

மதுரை அதிமுகவின் பூத் கமிட்டி கூட்டம் பொதும்பு, அதலை, அரியூர் ஆகிய பகுதி நடைபெற்றது.

மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் மேற்கு தெற்கு ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கூட்டம் பொதும்பு, அதலை, அரியூர் ஆகிய பகுதி நடைபெற்றது, இதற்கு ஒன்றிய செயலாளர் அரியூர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். பூத் கமிட்டியை சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார்.


இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கே தமிழரசன், எஸ். எஸ்.சரவணன், கே,மாணிக்கம், எம்.வி கருப்பையா, மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் வெற்றிவேல், மாவட்ட பொருளாளர் திருப்பதி, ஒன்றிய செயலாளர் ராமையா உட்பட பல கலந்து கொண்டனர்.


ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது; புரட்சித்தலைவர் இருந்த பொழுது 16 லட்சம் தொண்டர்கள் இருந்தனர், அதனை தொடர்ந்து புரட்சி தலைவி அம்மா ஒன்னரை கோடி தொண்டர்களை உருவாக்கி கொடுத்தார். தற்போது எடப்பாடியார் 2 கோடியே 84,000 தொண்டர்களை இன்றைக்கு உருவாக்கி மாபெரும் இயக்கமாக உருவாக்கி உள்ளார்.


கைத்தறி நெசவாளர்களுக்கு ஆண்டு முழுவதும் வேலை வாய்ப்பை உருவாக்கு வண்ணம் இலவச வேட்டி, சேலை திட்டத்தை புரட்சித்தலைவர் கொண்டு வந்தார் , அதனை தொடர்ந்து புரட்சி அம்மா தாலிக்கு தங்கம் திட்டம், மடிக்கணினி திட்டம், கிராமப்புறங்களில் கறவை மாடு ஆடுகள் திட்டம் ஆகியவற்றை வழங்கி பொருளாதாரத்தை  உயர்த்தினார்.


எடப்பாடியார் பெண்களுக்கு இருசக்கர வாகன திட்டம், ஆயிரம் அம்மா மினி கிளினிக் குடி மாராமத்து திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை உருவாக்கினார். இப்படி மக்களை நேசிக்கும் தலைவர்களாகபுரட்சித் தலைவர், புரட்சித்தலைவி அம்மா, எடப்பாடியார் ஆகியோர் இருந்தனர். ஆனால் இன்றைக்கு மக்களுக்கான திட்டங்களை எல்லாம் திமுக அரசு  ரத்து செய்துவிட்டனர் 520தேர்தல் வாக்குறுதியை ஸ்டாலின் கொடுத்தார் ஆனால் 100% நிறைவேற்றி விட்டதாக பச்சைபொய் கூறுகிறார்.


நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்வோம் என்று உதயநிதி கூறினார்  தற்போது நீட் ரத்து செய்ய ஒரு கோடிபேரிடம் கையெழுத்து வாங்குவோம் அதற்கு அதிமுக கையெழுத்து போடுமா எனக் கூறியுள்ளார்  நீங்கள் நீட் தேர்வில் நாங்கள் தோல்வியடைந்து விட்டோம் என்று ஒப்புக்கொள்ளுங்கள் எடப்பாடியார் 8 கோடி மக்களிடம் கையெழுத்து வாங்கி தருவார். நீட் தேர்வை செய்ய ஜனாதிபதி கையெழுத்து வேண்டும்   இது கூட தெரியாமல் உதயநிதி பேசி வருகிறார்.


காவிரி டெல்டா பகுதியில் 3 லட்சம் பயிர்கள் கருகி வருகிறது. காவிரி ஒழுங்காற்று ஆணையம் தண்ணீர் திறக்க உத்தரவு இட்டுள்ளது. உச்சநீதிமன்றமும் தண்ணீரை விட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. ஆனால் கர்நாடகா அரசு இதை மதிக்காமல் தண்ணீர் தர மறுக்கிறது இதனால் பயிர்கள் கருகி வேதனையில் விவசாயி இறந்த கொடுமை நடந்து வருகிறது. உலகம் பற்றி பேசும் உதயநிதி தற்போது மாநில அரசு உரிமையை மீட்க குரல் கூட எழுப்பவில்லை


திமுகவின் மக்கள் விரோத செயல்களை நாள்தோறும் எடப்பாடியார் தோல் உரித்து காட்டி வருகிறார்.இன்றைக்கு தமிழகத்தில் சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில்களை குழி தோண்டி புதைக்கும் தொலைநோக்கு பார்வையற்ற அரசாக தி.மு.க அரசு உள்ளது. இன்றைக்கு தமிழ்நாட்டினுடைய இளைய தலைமுறையின் எதிர்காலம் கேள்வி குறியாகிவிடுமோ என்கிற  மிகப்பெரிய அச்சம் தமிழ்நாட்டில் ஏற்பட்டுருக்கிறது.


அதைத்தான் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடியார் நாட்டின் முதுகெலும்பு வேளாண்மை, நாட்டின் உயிர் மூச்சு சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் என்று அழகாக சொல்லி உள்ளார்.  தமிழக முழுவதும் 9 லட்சத்திற்கு மேற்பட்ட சிறு,குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகளில் சுமார் 2 கோடிக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றிவருகிறார்கள் .


இந்த இரண்டரை ஆண்டுகால திமுக ஆட்சியில் பொருளாதாரம் மந்தநிலை, மூலப்பொருட்கள் விலை உயர்வு, ஆளுங்கட்சியின் அராஜகம், தற்போது இரண்டாம் முறையாக மின் கட்டண உயர்வு ,பீக் ஹவர் கட்டணம், சோலார் தகடுகள் பொறித்து அதன் மூலம் உபயோகிக்கும் மின்சாரத்திற்கு கூடுதல் கட்டணம் இதனால் சிறு,குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் பெரும் சரிவை சந்தித்து வருகிறது


25.5.2023 அன்று ஒருநாள் போராட்டத்தில் சுமார் 9,500 கோடி ரூபாய் உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், சுமார் 2 கோடி தொழிலாளர்கள் தங்களது ஒருநாள் சம்பளத்தை இழந்துள்ளதாகவும் தொழில் அமைப்புகள் கூறிவருகின்றன. திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதியில், 2021 முதல் ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சம் வேலை வாய்ப்புகள் என்ற அளவில் 2026 ஆம் வரை 50 லட்சம் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க தீவிர முயற்சி எடுக்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதி 185 இல் கூறப்பட்டுள்ளது.அதே போல் அரசு துறைகளில் 5.50 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதி எண்கள் 187,188,189 கூறப்பட்டுள்ளது


தற்போது முதலமைச்சர் கடந்த இரண்டு ஆண்டு காலத்திலே 12 ஆயிரத்து 577 பேருக்கு அரசு பணி வழங்கப்பட்டுள்ளது. தற்போது நடப்பாண்டில் 17 ஆயிரம் பேருக்கும், அடுத்த இரண்டு ஆண்டுகளிலே ஐம்பதாயிரம் பேருக்கு வழங்கப்படும் என்று 10,205 பேருக்கு அரசாணை வழங்கிய நிகழ்ச்சியில் பேசினார்.  ஆனால் தேர்தல் வாக்குறுதலில் ஐந்தாண்டுகளில் 5 லட்சம் அரசு வேலை வாய்ப்புகளை உருவாக்கி தருவோம் என்று திமுக தேர்தல் வாக்குறுதியை ஒப்பிட்டு பார்க்கும்போது இது தோல்வி அடைந்து இருக்கிறது.


ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சம் வீதம்  ஐந்து ஆண்டுகளுக்கு 50 லட்சம் வேலைவாய்ப்பு என்று சொன்னார்களே அதுவும் இன்றைக்கு கேள்விக்குறியாகி இருக்கிறது. எடப்பாடியார் இளைஞர்களுக்கு ஆதரவாக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார் .இதனை தொடர்ந்து இன்றைக்கு கட்சியில் கூட இளைஞர்களுக்கும், மகளிர்க்கும் அதிகமான முக்கியத்துவத்தை அளித்து ஜனநாயக காவலராக எடப்பாடியார். உள்ளார்


இன்றைக்கு உதயநிதி ஸ்டாலின் இளைஞர் அணி மாநாட்டை நடத்த போகிறோம் என்று சொல்லி ஒரு அறிவிப்பைகொடுத்துள்ளார்கள். இந்த மாநாட்டில் இளைஞர்களுக்கு எதிர்காலத்திற்கு  வேலை வாய்ப்புகளுக்கு உத்தரவாதத்திற்கு கூறப்போகிறார்கள். இளைஞர்களுக்கு கேள்விக்குறியாக இருக்கும் வேலைவாய்ப்பில் திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்று வண்ணம், வேலை வாய்ப்புக்கான அறிவிப்பு அதில் இடம்பெறுமா? அறிவிப்பு அளிக்க உதயநிதி ஸ்டாலின் முன் வருவாரா? என கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/