ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா ஒன்றியத்தில் ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா, குழந்தை தொழிலாளர் முறை அகற்றும் திட்டம் மற்றும் பிளாஸ்டிக் ஓமினியம் CSR - திட்டத்தின் மூலம் லாலாபேட்டை அரசினர் மேல்நிலைப்பள்ளி மற்றும் LFC பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இயல் இசை நாடகம் வடிவில் ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா - கலைக்குழு மூலம் குழந்தைகள் உரிமைகள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில் குழந்தைகள் உரிமைகள், பெண் குழந்தைகள் பாதுகாப்பு, குழந்தை திருமணம், பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம், சைல்டு லைன் - 1098 இன் முக்கியத்துவம், மற்றும் பெண் கல்வியின் அவசியம் குறித்து ஆடல் பாடல் மற்றும் குறு நாடகங்கள் மூலம் விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது.
இந்த விழிப்புணர்வு நிகழ்விற்கு முதன்மை மேலாளர் ஜான் சுகுமார், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பா. சாம்ராஜ், கலைக்குழு ஒருங்கிணைப்பாளர் செல்வம், குணசேகரன், பள்ளி தலைமை ஆசிரியர், மேரி குயின், மற்றும் சுதா ஜோதி ஆகியோர் தலைமை தாங்கினார். கலைக்குழு உறுப்பினர்கள் கீதா லட்சுமி, சிரில் சுதாகர் மற்றும் கலையுகம் வாத்திய குழு ஆகியோர் முன்னிலை வகித்து இவ்விழிப்புணர்வின் முக்கியத்துவத்தை குறித்து விளக்கினர்.
இந்த விழிப்புணர்வு நிகழ்வில் லாலாபேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் மாணவியர்கள் 450 பேரும், LFC பள்ளி மாணவிகள் 2400 பேரும் , ஆசிரிய பெருமக்கள் 45 பேரும் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக