ஆலங்குடியில் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை சிறப்பிக்கும் வகையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 24 செப்டம்பர், 2023

ஆலங்குடியில் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை சிறப்பிக்கும் வகையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் கலைஞர் கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு விழாவை சிறப்பிக்கும் வகையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் 23/9/2023 இன்று அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆலங்குடியில் நடைபெற்றது.


 மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.ஐ.சா.மெர்சி ரம்யா, இ.ஆ. ப,.அவர்கள் முகாமினை தொடங்கி வைத்து 39 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூபாய் 3 லட்சத்து 56 ஆயிரத்து 500 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.


முகாமில் சிறப்பு மருத்துவர்கள் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளை பரிசோதனை செய்து மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ சான்றுடன் கூடிய அடையாள அட்டை,இந்திய அரசின் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பதிவு UDID,முதலமைச்சர் அவர்களின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டை பதிவு மற்றும் மறுவாழ்வு உதவிகள் பெறுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.


இம்முகாமில் மாவட்ட அரசுத் துறை அலுவலர்கள், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திரு எஸ் உலகநாதன் பள்ளி தலைமை ஆசிரியர் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர், பேரூராட்சி மன்ற தலைவர் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர். விளாங்குடிவில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக முட நீக்கியல் துறை அலுவலர் ஜெகன் முருகன் அவர்கள் நன்றி கூறினார்.


- எம். மூர்த்தி, தமிழக குரல் மாவட்ட செய்தியாளர் புதுக்கோட்டை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/