டெல்டாவில் கருகி வரும் நெற்பயிர்களை காப்பாற்ற காவிரி நீர் வழங்க கோரி விவசாயிகள் தொடர்ந்து முழக்க போராட்டம் நடத்தி வருகின்றனர். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 21 செப்டம்பர், 2023

டெல்டாவில் கருகி வரும் நெற்பயிர்களை காப்பாற்ற காவிரி நீர் வழங்க கோரி விவசாயிகள் தொடர்ந்து முழக்க போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தஞ்சாவூர் செப்டம்பர் 20 காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியாக்கம் சார்பில் டெல்டாவில் கருகும் நெற்பயிரை காப்பாற்ற தமிழகத்துக்கு காவிரி நீரை பெற்றுத் தரக் கோரி பனகல் கட்டிடம் முன்பு தொடர் முழக்கப் போராட்டம் இன்று நடைபெற்றது.


போராட்டத்திற்கு காவேரி படுகை பாதுகாப்பு கூட்டிய நிர்வாகி வீரமோகன் முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் சோ. பாஸ்கர், பி.செந்தில்குமார் ஆகியோர் தலைமை வகித்தனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் சாமி.நடராஜன் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து உரையாற்றினார். தமிழ்நாடு விவசாய சங்க மாநிலத் தலைவர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ். குணசேகரன் முடித்து வைத்து சிறப்புரையாற்றினார். 


கோரிக்கைகளை விளக்கி மக்கள் அதிகாரம் மாநில பொருளாளர் காளியப்பன், சமவெளி விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் சு.பழனிராஜன், தாளாண்மை உழவர் இயக்க நிறுவனர் கோ.திருநாவுக்கரசு, தமிழர் தேசிய முன்னணி முன்னாள் பொது செயலாளர் அய்யனபுரம் சி.முருகேசன், ஜனநாயக விவசாய சங்க மாநில தலைவர் இரா.அருணாசலம், அகில இந்திய விவசாயிகள் தொழிற்சங்க நிர்வாகி ஆர் .வாசு ,தஞ்சை மாவட்ட வணிகர் சங்க பேரவை நிர்வாகி பி.ராஜாசீனிவாசன், தமிழ்நாடு விவசாய சங்க தலைவர் சாமு.தர்மராஜன், தமிழ்நாடு கரும்பு உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் பி.கோவிந்தராஜ், தமிழ்நாடு விவசாய சங்க கூட்டியக்க தலைவர் ஆர்.சுகுமாரன், விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிர்வாகி ஜி.சங்கர், விவசாய தொழிலாளர் சங்கத்தின் தஞ்சை மாவட்ட செயலாளர் சி.பக்கிரிசாமி, காவிரி டெல்டா விவசாய சங்க தலைவர் ஏ.கே ரவிச்சந்தர், தமிழ்நாடு கரும்பு உற்பத்தியாளர் சங்க நிர்வாகி பி.ராமசாமி, தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் நலசங்கதலைவர் வி.கே.சின்னத்துரை, தமிழக நலிவுற்ற விவசாய சங்க நிர்வாகி கே எஸ் முகமது இப்ராஹிம் உள்ளிட்டார் பங்கேற்று கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினார்கள். 


ஆர்ப்பாட்டத்தில் அனைத்து விவசாயிகள் சங்க அமைப்புகள், பல்வேறு அமைப்புகள் , இயக்கங்களின் நிர்வாகிகள், தலைவர்கள் பங்கேற்றுனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/