மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கா. கார்த்திகா தலைமையில் வீரபாண்டி கற்றல் மையம் திறக்கப்பட்டது. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 1 செப்டம்பர், 2023

மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கா. கார்த்திகா தலைமையில் வீரபாண்டி கற்றல் மையம் திறக்கப்பட்டது.

செப்டம்பர் 1 2023,  இன்று 2023-2024 ஆம் கல்வி ஆண்டில் மதுரை மாவட்டத்தில்  உள்ள 15 ஒன்றியங்களிலும், புதிய பாரத எழுத்தறிவு திட்ட கற்றல் மையங்கள் தொடங்கப்பட்டது. இம்மையங்களில் 15 வயதிற்கு மேற்பட்ட முற்றிலும் எழுத படிக்கத் தெரியாத 16,984 கற்போருக்கு எழுத்தறிவு,  எண்ணறிவு மற்றும் வாழ்வியல் திறன் சார்ந்த கல்வி வழங்கப்பட உள்ளன.

மதுரை மாவட்டம் மதுரை மேற்கு ஒன்றியம் வீரபாண்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இன்று1.9.2023 மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்  கா. கார்த்திகா  தலைமையில் வீரபாண்டி கற்றல் மையம் திறக்கப்பட்டது.

பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி  இயக்குநர்  முனைவர் மு. பழனிச்சாமி கற்றல் மையங்களை திறந்து வைத்து கற்போருக்கு புத்தகங்கள் மற்றும் எழுது பொருள்கள் வழங்கி சிறப்புரையாற்றினர்.

விழாவில் அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள். மதுரை மேற்கு ஒன்றிய வட்டாரக்கல்வி அலுவலர்கள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள், பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். 

மதுரை மாவட்டம் முழுமைக்கும் 2023-24 கல்வியாண்டில் செயல்பட உள்ள புதிய பாரத எழுத்தறிவு திட்ட கற்றல் மையங்களை மாவட்ட கல்வி அலுவலர்கள், உதவி திட்ட அலுவலர்கள், மாநில ஒருங்கிணைப்பாளர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தலைமையாசிரியர்கள் மக்கள் பிரதிநிதிகள் துவக்கி வைத்துள்ளனர்.


அனைத்து ஒன்றிய வட்டார வளமைய (பொறுப்பு) மேற்பார்வையாளர்கள் மற்றும் வட்டார வளமைய ஆசிரியப் பயிற்றுநர்கள் எழுத்தறிவு மையங்களை பார்வையிட்டு,  மையங்கள் வாரியாக அறிக்கை சமர்ப்பிக்க  உள்ளார்கள். வீரபாண்டி கற்றல் மையத்தை குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்து பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்குனர்  பேசுகையில்.. தமிழ்நாடு முழுமைக்கும் இந்த திட்டம் இன்று முதல் தொடங்கப்படுகிறது.இன்று வீரபாண்டி  புதிய பாரத எழுத்தறிவு மையத்தை  மதுரை மாவட்டத்தில் துவக்கி வைத்து வயது முதிர்ந்த கற்பவர்களுக்கு.. தன்னார்வலர்களுக்கு எழுது பொருள்கள்.. புத்தகங்கள் வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன். வீரபாண்டி ஊராட்சி ஒன்றியத்தில் கிட்டத்தட்ட 80 விழுக்காடு மக்கள் அனைவரும் எழுத படிக்க தெரிந்துள்ளனர் என்று ஊராட்சி ஒன்றிய தலைவர் கூறுகையில் மகிழ்ச்சியாக உள்ளது. 


இவ்வாண்டு துவக்கப்படும் இந்த கற்றல் மையம் மூலமாக  மீதமுள்ள 20% கற்போர்கள் படித்து வீரபாண்டி ஊராட்சி முழுமைக்கும் 100% எழுத்தறிவு பெற்ற ஊராட்சியாக மாற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்  வீரபாண்டி ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் கற்போர்களை பாராட்டி எழுது பொருள்கள் புத்தகங்களை வழங்கினார். இவ்விழாவில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவி திட்ட அலுவலர்கள் மேற்கு வட்டார வளமையா ஆசிரியர் பயிற்றுநர்கள்.


மேலாண்மை குழு அனைத்து உறுப்பினர்கள் தலைவர் மற்றும் உப தலைவர் கலந்து கொண்டு முழுமைக்கும் எழுத்தறிவு பெற்ற ஊராட்சியாக மாற்ற பள்ளி மேலாண்மை குழு உறுதி செய்யும் என்று தீர்மானங்களை நிறைவேற்றினர். வீரபாண்டி ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியின்  தலைமை ஆசிரியர் செல்வ குமரேசன் புதிய பாரத எழுத்தறிவு திட்ட மாவட்ட ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர்  ஜெரால்டு நிகழ்வுகளை ஒருங்கிணைத்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/