தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 21 செப்டம்பர், 2023

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை.

சென்னையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் உதவியாளராக இருந்த காசி என்பவர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், மின்வாரிய வரி ஏய்ப்பு தொடர்பாக மின்வாரிய ஒப்பந்த நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் சுமார் 30க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 


இந்நிலையில் தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் வருமான வரித் துறையினர் தற்போது சோதனை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி அனல் மின்நிலைய ஒப்பந்த பணிகளுக்கும் பில்களுக்கும் 10% கமிஷன் அமைச்சருக்கு கொடுத்தால்தான் ஒப்பந்தம் கிடைக்கும் நிலை உள்ளதாக ஒப்பந்தார சங்க நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். 


இந்நிலையில் வருமான வரித்துறை ரெய்டு நடப்பது குறிப்பிடதக்கது. இந்த சோதனையால் அனல்மின் நிலைய வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அனல்மின் நிலைய பணிகளுக்காக ஒப்பந்ததார்கள் சங்கம் மூலம் ஒப்பந்ததார்கள் பலர் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் அதிகளவில் பணம் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், பணி முடிந்த பின்னரும் அவர்களால் வேலைக்கான பணத்தை திரும்ப பெற முடியாமல் கடினப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. 


இந்நிலையில் புதிதாக இணையும் ஒப்பந்தாரர்களிடமும், ஒப்பந்தாரர்கள் சங்கம் பணம் வாங்கியதாக தெரிகிறது. எனவே ஒப்பந்ததார்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் அவர்களுக்கு உடந்தையாக உள்ள அதிகாரிகள் வீடுகளிலும் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட உள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/