கலைஞரின் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தினை அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன் - தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தனர். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 16 செப்டம்பர், 2023

கலைஞரின் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தினை அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன் - தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தனர்.

விருதுநகர் மாவட்டம்,  காரியாபட்டி வட்டம், கல்குறிச்சியில், மகளிர் உரிமை திட்ட துவக்கவிழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், தலைமை வகித்தார். காரியாபட்டி ஒன்றியக்குழு தலைவர் முத்துமாரி  துணைத்தலைவர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் .கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம்தென்னரசு  ஆகியோர் கலைஞரின் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தினை தொடங்கி வைத்து, மகளிருக்கு வங்கி பற்று அட்டைகளை (ATM Cards) வழங்கினார். 


அப்போது, அவர் பேசும்போது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான  காஞ்சிபுரத்தில் 1 கோடியே 6 இலட்சத்து 50 ஆயிரம் மகளிர் பயன்பெறும் வகையில், மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000/- வழங்கிடும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை தொடங்கி வைத்தார். 


பிரதிபலன் பாராமல் வாழ்நாளெல்லாம் ஓயாமல் உழைத்துக்கொண்டிருக்கும் பெண்களின் உழைப்புக்கு அங்கீகாரம் கொடுப்பதும், பெண்களின் வாழ்வாதாரத்திற்கு உறுதுணையாக இருந்து, வறுமையை ஒழித்து, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சுயமரியாதையோடு சமூகத்தில் அவர்கள் வாழ்வதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும். 


பெண்களுக்கு மகளிர் இலவச பேருந்து, புதுமைப்பெண் திட்டம் உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தும், தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் இயங்கும் அரசுக்கு என்றும் ஆதரவு அளிக்க வேண்டும் என, தெரிவித்தார்.


நிகழ்ச்சியில், நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்   துறை அமைச்சர் பேசும்போது: முதலமைச்சர், இத்திட்டத்தை துவக்கி வைத்து இந்த தருணம் வரலாற்றிக் பொன் எழுத்துக்களால் பொறிக்கபப்ட வேண்டியது. ஒவ்வொரு பெண்களையும் தன்னுடைய தாயாகவும், தன்னுடைய சகோதரியாகவும், பார்க்கக்கூடிய தமிழ்நாடு முதலமைச்சர், பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் மற்றும் கலைஞரின் நூற்றாண்டு விழாவில் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது மிகவும் சிறப்பானதாகும்.


ஒரு அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிறகு சாலை, பேருந்து, பாலம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வந்தாலும், ஒவ்வொரு தனி மனிதனுடைய வாழ்க்கையிலும் ஒவ்வொரு சகோதரியினுடைய வாழ்க்கையிலும் ஒவ்வொருவருடைய வீட்டிலும் ஒரு விளக்கை ஏற்றி வைக்கக்கூடிய மகத்தான திட்டம் தான் கலைஞரின் மகளிர் உரிமைத் தொகை திட்டமாகும்.


வீட்டை விட்டு வெளியில் சென்று வேலை பார்ப்பவர்கள் தான் வேலை செய்கிறார்கள் என்று காலம் காலமாக இருந்து வருகிறது. இந்த சமுதாயத்திற்கு அடிப்படையான குடும்பத்தின் ஆணிவேராக இருப்பது பெண்கள்தான். குடும்பத்தை உயர்த்துவதற்கும், குழந்தைகள், கணவர்கள், குடும்ப உறுப்பினர்கள் என, அனைவருக்காகவும் உழைக்கும் பெண்களுக்கு இந்தியாவிலேயே முதல் முதலாக அங்கீகாரம் கொடுத்தது  தமிழ்நாடு முதலமைச்சர்.


இது உதவியாக இல்லாமல் இதை பெறுவதற்கு உங்களுக்கு உரிமை இருக்கின்றது. நீங்கள் செய்து கொண்டிருக்கின்ற கடமைக்கான உரிமையை நீங்கள் பெற்று இருக்கிறீர்கள். அதற்கான தொகை தான் இன்று உங்களுக்கு வழங்கப்படுகிறது. குரல் தேயப்பேசி, விரல் தேய எழுதி ஒடுக்கப்பட்டோர், பெண்கள் என, அனைத்துச் தமிழ் சமுதாயம் உலக அளவில் ஒரு உன்னதமான நிலையை அடைய வேண்டும் என்று மகத்தான கனவு கண்டு அவற்றை செயல்படுத்துவதற்காக கொள்கை வழியில்  போராடியவர் பேரறிஞர் அண்ணா. 


தமிழன் யாருக்கும் தாழாமல், யாரையும் தாழ்த்தாமல் உயர வேண்டும் என்பதற்காகவும், தமிழன் யாரையும் சுரண்டாமல், யாராலும் சுரண்டப்படாமல் சுயமரியாதையான ஒரு வாழ்வு வாழ வேண்டும் என்று பேரறிஞர் அண்ணா தொடர்ச்சியாக எழுதியும் பேசியும் வந்தார். ஆதி காலமாக இருந்தாலும் இன்றைய காலகட்டமாக இருந்தாலும் உலக அளவில் சுயமரியாதையாக வாழக்கூடிய பல்வேறு சமூகங்களில், ஒடுக்கப்பட்டோர், விளிம்பு நிலை மனிதர்களுடைய வாழ்க்கை மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கு மிக முக்கியமான காரணம் அவர்கள் கைகளில் பணம் இருக்க வேண்டும்.


ஒவ்வொருவருடைய கைகளில் பணம் இருக்கின்ற போது, அது தரக்கூடிய தன்னம்பிக்கையும், ஆறுதலும் எழுத்திலும் சொல்லிலும் சொல்ல முடியாது. இன்றைய நவீன பொருளாதார அறிஞர்கள் கூட, மக்கள் கையில் அவர்கள் விருப்பத்திற்கும் அத்தியாவசியமான செலவுக்கு பணம் கையில் இருப்பது பொருளாதார வளர்ச்சிக்கும் தனி மனிதனுடைய மேம்பாட்டிற்கும் மிக முக்கியம் என்று குறிப்பிடுகிறார்கள் என்று பேசினார். நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ. ரவிகுமார், அருப்புக்கோட்டை வருவாய்  கோட்டாட்சியர்.    சிவக்குமார், விருதுநகர் எம்.எல்.ஏ. சீனிவாசன்   ஊராட்சி ஒன்றியக்குழு  பொன்னுத்தம்பி பொ.சசிகலா சுமதி ராஜசேகர் காளீஸ்வரி(நரிக்குடி). பேரூராட்சி தலைவர்கள் செந்தில், துளசிதாஸ், மாவட்ட கவுன்சிலர் தங்க   தமிழ்வாணன், ஒன்றியச் செயலாளர் கண்ணன், செல்லம், மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் ஜெயச்சந்திரன் துணை  செயலாளர் குருசாமி | ஒன்றிய கவுன்சிலர்கள் பாரதி, சேகர், ஊராட்சி மன்ற தலைவர் கணேஷ், பொதுக்குழு உறுப்பினர் சிவசக்தி மாவட்ட விவசாய தொழிலாளர் அணி தலைவர் தங்கப்பாண்டியன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/