கலைஞர் மகளிர் உதவி திட்டம் முழுமையாக குடும்பத் தலைவிகளுக்கு முறையாக வந்து சேருமா?குடும்பத் தலைவிகள் எதிர்பார்ப்பு!!! - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 26 செப்டம்பர், 2023

கலைஞர் மகளிர் உதவி திட்டம் முழுமையாக குடும்பத் தலைவிகளுக்கு முறையாக வந்து சேருமா?குடும்பத் தலைவிகள் எதிர்பார்ப்பு!!!


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தமிழக முதல்வர் அறிவித்த மாதம் தோறும் குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் என்ற தேர்தல் வாக்குறுதி  தற்போது முழுமையாக செயல்படவில்லை இது கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டுமல்ல தமிழ்நாடு முழுவதும் பேசப்படும் ஒரு கருத்தாக உள்ளது உதாரணமாக மறைந்த முதல்வர்கள் ஆன மாண்புமிகு கலைஞர் மு கருணாநிதி அவர்களும்சரி மறைந்த முதல்வர் மாண்புமிகு ஜெயலலிதா அம்மையார் அவர்களும் சரி பொது மக்களுக்கு சில தேர்தல் வாக்குறுதிகளை கொடுத்தார்கள் அதை நிறைவேற்றுவது அவர்களின் கடமை அவர்கள் அளித்த வாக்குறுதி ஓர் அறிக்கையின் உதாரணம் கலைஞர் தேர்தலில் நிற்கும் போது  நான் ஆட்சிக்கு வந்தால் ஏழை எளியோர் பணக்காரர் ஆகியோர்களை பாரபட்சமின்றி இலவச வண்ண தொலைக்காட்சி பெட்டி அளிக்கிறேன் என்று தேர்தல் வாக்குறுதி அளித்தார் அதேபோல் நாங்கள் ஆட்சியில் அமர்ந்தால் விவசாய கடன் அத்தனையும் எந்த ஒரு நிர்பந்தமின்றி தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்தார் ஆட்சியில் அமர்ந்தார் சொன்னது போல் எந்த ஒரு பாரபட்சமின்றி முழுமையாக தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றினார்.

அதேபோல் மறைந்த முதல்வர் ஜெ ஜெயலலிதா அவர்கள் தான் ஆட்சிக்கு வந்தால் மகளிர்க்கு இலவச மின்விசிறி மற்றும் மிக்ஸி கிரைண்டர் தாளிக்கு தங்கம் கல்லூரி படிப்பு முடித்து இருந்தால் பெண்களுக்கு தக்க சன்மானம் என்று ஏகப்பட்ட சலுகைகள் பெண்களுக்கு என்று அறிவித்து இருந்தார் அவர் ஆட்சிக்கு வந்ததும் அதை செம்மையாக நிறைவேற்றினார், ஆனால் வரலாற்று மிக்க தமிழகத்தை ஆண்ட கலைஞர் அவர்களின் தவப்புதல்வன் எண்ணற்ற தேர்தல் வாக்குறுதியை அள்ளி வீசிவிட்டு தற்போது செயல்படுத்தாமல் இருப்பது மிகவும் வேதனைக்குரிய விஷயமாக பொதுமக்கள் இடையே காணப்படுகிறது.


இதற்கு உதாரணமாக மகளிர் உதவித்தொகை ரூபாய் 1000 மாதம் தோறும் இன்று குடும்பத் தலைவிகளுக்கு அறிவித்துவிட்டு தற்போது முக்கியமான நிபந்தனைகள் போடுவது  பொதுமக்களிடையே முறையான ஒரு செயலாக அமையவில்லை பெண்கள் நடுரோட்டில் நின்று ஆயிரம் ரூபாய் காத்துக்கொண்டு இருக்கிறார்கள் இதனால் வயதான பெண்மணிகள் முதல் அனைவரும் வட்டாட்சியர் அலுவலகத்தை நாடுவது கிராம நிர்வாக அலுவலர் நாடுவது மற்றும் அரசு அறிவித்துள்ள கம்ப்யூட்டர் நிறுவனங்களை தொடர்பு கொள்வது என்று பெண்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள் இதை அறிந்த முதல்வர் அவர்கள் மேற்குறிப்பிட்ட தேர்தல் வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டும் இல்லை என்றால் முழுமையாக நீக்கப்பட வேண்டும் என்று பொதுமக்கள் இடையே சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.


மேலும் தாங்கள் ஆட்சிக்கு  வர வேண்டும் என்ற எண்ணத்தில் கட்சிகள் பொதுமக்களை திசைதிருப்பும் வகையில்  இலவச சலுகைகள் அறிவிக்கிறார்கள் இதை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொள்கிறது ஆனால் இதை முழுமையாக செயல்படுத்தவில்லை என்றால் அக்கட்சியின் அங்கீகாரத்தை முழுமையாக தேர்தல் ஆணையம் ரத்து செய்ய வேண்டும் என்ற ஓர் அரசாணையை மத்திய அரசு மற்றும் நீதிமன்றங்கள் செயல்படுத்த வேண்டும் அப்போதுதான் சுதந்திர இந்தியா என்ற ஒரு மாற்றத்தை உருவாக்க முடியும் என்று தற்போது வளர்ந்து வரும் இளைஞர்களின் வலுவான வேண்டுகோளாக உள்ளது எனவே இது போன்று அரசியல் கட்சிகள் பொதுமக்களை அலைக்கலைப்பது மிகவும் வேதனைக்குரிய விஷயமாக உள்ளது இதற்கு ஜனநாயக அரசு என்ன நடவடிக்கை மேற்கொள்ளப் போகிறது என்று வளர்ந்து வரும் இளைஞர்களின் இதயத்தில் வளர்ந்து வரும் ஒரு செயலாக உள்ளது.


உடனடியாக சம்பந்தப்பட்ட இத்துறை அதிகாரிகள் மற்றும் நீதிமன்றங்கள் இதை கவனிக்குமா? என்று சமூக ஆர்வலர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்


- கிருஷ்ணகிரி மாவட்ட செய்தியாளர் எஸ்.சத்திய நாராயணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/