மீனாட்சி மருத்துவமனையில் பசுமை மருத்துவ மாநாடு. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 11 செப்டம்பர், 2023

மீனாட்சி மருத்துவமனையில் பசுமை மருத்துவ மாநாடு.

இந்தியாவிலேயே முதல் முறையாக தஞ்சாவூரில் பசுமை மருத்துவ மாநாடு செப்டம்பர் 9- தேதியும், 10-தேதியும்   நடைபெற்றது இதை மீனாட்சி மருத்துவமனை மற்றும் இந்திய அவசர சிகிச்சை மருத்துவ சங்கம் இணைந்து இன்வெஸ்டிகான் 2023 என்ற பெயரில் ஏற்பாடு செய்திருந்தனர். 


இதில் மருத்துவ பரிசோதனை முடிவுகளை மருத்துவர்கள் எளிதில் சரியாக புரிந்து கொண்டு நோயாளிக்கு உடனடியாக சிகிச்சை அளிப்பதன் மூலம் பல உயிர்களை காப்பாற்றும் வகையில் சிறப்பு மருத்துவர்கள் மற்றும் மூத்த மருத்துவர்கள் 19 தலைப்புகளில் விளக்கவுரை ஆற்றினார்கள். இந்த மாநாட்டிற்கு வந்த மருத்துவர்களை மீனாட்சி மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ரவிச்சந்திரன் வரவேற்றார். 


இந்த மாநாட்டை சுற்றுச் சூழல் மற்றும் மாசு கட்டுப்பாட்டு துறை அமைச்சர் .சிவ. வீ.மெய்யநாதன் துவக்கி வைத்து உரையாற்றினார் இதில்  மேயர்  சண்.ராமநாதன், துணை மேயர் மருத்துவர். அஞ்சுகம் பூபதி ஆகியோர் உடன் இருந்தனர் . மேலும் மருத்துவர்களுக்கு பயிற்சி அளிக்க 5 புதிய பயிற்சி கருத்தரங்க வகுப்புகளை துவங்கி வைத்தார். தமிழ்நாடு இந்திய மருத்துவ சங்க தலைவர். டாக்டர்.செந்தமிழ் பாரி தலைமை தாங்கினார். தமிழ்நாடு மருத்துவ சங்கத்தின் அடுத்த தலைவர் டாக்டர். அபுல் ஹசன் சிறப்புரை ஆற்றினார். இந்திய அவசர சிகிச்சை மருத்துவ சங்கத்தின் செயலாளர் டாக்டர். ராஜதுரை. துணைத் தலைவர் டாக்டர். சாய் சுரேந்தர் மற்றும் தமிழ்நாடு இந்திய மருத்துவ சங்கத்தின் சுற்று சூழல் பாதுகாப்பு பிரிவின் செயற்குழு உறுப்பினர் டாக்டர் சபி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார். டாக்டர் சுபாஷ் சந்திரன் மருத்துவர்களுக்கு மன அழுத்தத்தை தவிர்த்து ஊக்கமுடன் செயல்பட சிறப்புரை ஆற்றினார். 

இந்த பசுமை மாநாட்டில் சுற்று சூழல் மாசு ஏற்படுத்தும் அனைத்து பொருள்களும் தவிர்க்கப்பட்டது. முக்கியமாக பிளாஸ்டிக் மற்றும் கரியமில வாயு வெளிவிடும் அனைத்து பொருள்களும் தவிர்க்கப்பட்டது. மருத்துவமனையில் மாசு கட்டுபடுத்த கட்டுப்படுத்த மருத்துவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த மாநாட்டில் பதிவு செய்த மருத்துவர்கள் ஒவ்வொருவர் சார்பாக ஒரு மரக்கன்று நடப்பட்டது. 200க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் கலந்து கொண்டனர். மீனாட்சி மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவு தலைமை மருத்துவர். சரவணவேல் மாநாட்டில் கலந்து கொண்டவர்களுக்கு நன்றி தெரிவித்தார். இதற்கான ஏற்பாடுகளை மீனாட்சி மருத்துவமனை நிர்வாகம் செய்திருந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/