விழுப்புரம் தந்தை பெரியார் நகர் தாய் மூகாம்பிகை அம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர் சாமி தரிசனம். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 3 செப்டம்பர், 2023

விழுப்புரம் தந்தை பெரியார் நகர் தாய் மூகாம்பிகை அம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர் சாமி தரிசனம்.

விழுப்புரம் அருகே தந்தை பெரியார் நகர் கிருஷ்ணா சதுக்கத்தில் உள்ள தாய் மூகாம்பிகை கோவிலில் திருப்பணிகள் நடந்து, கும்பாபிஷேக விழா நடந்தது. கும்பாபிஷேக விழா 2ம் தேதி காலை 7:00 மணிக்கு கணபதி, லட்சுமி பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து, நவக்கிரக ஹோமங்கள், தனபூஜை, கோ பூஜையும் நடந்தது. இரவு 8:00 மணிக்கு முதல்கால யாகசாலை பிரவேசம், யாக பூஜையும், 108 திரவிய ஹோமங்களும் நடந்தது. இரவு 9:00 மகா தீபாராதனை நடந்தது.


தொடந்து, நேற்று காலை 6:00 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜையும், ஹோமங்களும் நடந்தது. காலை 10:00 மணிக்கு கலசங்கள் புறப்பாடும், 10:30 மணிக்கு கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. கோவில் அறங்காவலர் குழு தலைவர் ஞானபிரகாசம், நடராஜன், மோகனகுமார், கிருபாகரன் உள்ளிட்ட விழா குழுவினர், தந்தை பெரியார் நகர் பொது மக்கள் கும்பாபிஷேக பணிகளை மேற்கொண்டனர். இரவு 7:30 மணிக்கு உற்சவர் தாய் மூகாம்பிகை அம்மன் வீதியுலா நடந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/