சோழவந்தான் 8வது வார்டுக்கு உட்பட்ட இரட்டை அக்ரஹாரத்தில் உள்ள சந்தான கோபாலகிருஷ்ணன் கோவில் முன்பாக அமைந்துள்ள மேடையில் ராதா கிருஷ்ண கல்யாணம் நடைபெற்றது விழாவை முன்னிட்டு இரண்டு நாட்கள் நடந்த நிகழ்ச்சியில் முதல் நாள் ஹரே கிருஷ்ணா நாம பாராயணம் இதைத் தொடர்ந்து அஷ்டபதி பஜனை இரவு குரு கீர்த்தனைகள் நடந்தது.
இரண்டாம் நாள் காலை உற்சவ விருத்தி பஜனை பெண்கள் சீர் எடுத்து வந்தனர் தொடர்ந்து ராதா கிருஷ்ண கல்யாணம் நடைபெற்று ஆஞ்சநேய உற்சவம் மங்கள ஆராத்தி நடைபெற்றது இரவு சுவாமி புறப்பாடு நடந்தது திருக்கல்யாணத்திற்கான ஏற்பாடுகளை சோழவந்தான் பேரூராட்சி 8வது வார்டு கவுன்சிலரும் நகர அரிமா சங்க தலைவரும் கல்வியாளரும் தொழிலதிபருமான டாக்டர் எம் வி எம்.மருது பாண்டியன் பாஜக விவசாய அணி மாநில செயலாளர்.எம் வி எம் மணி முத்தையா மற்றும் 13வது வார்டு கவுன்சிலர் வள்ளி மயில் மணி முத்தையா குடும்பத்தினர் செய்திருந்தனர்.
திருக்கல்யாணத்தை தொடர்ந்து அனைவருக்கும் எம் வி எம் குடும்பத்தினர் சார்பாக திருமாங்கல்ய பிரசாதம் மற்றும் கல்யாண விருந்து வழங்கப்பட்டது ஸ்ரீ ராதா கிருஷ்ண பக்த மகளிர் சபா மற்றும் விழா கமிட்டனர் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக