அன்னை பாத்திமா கல்லூரி சார்பில் 700 பனை விதைகளை சேகரித்தனர். தமிழக கடற்கரைப்ப குதிகளில் வளர்க்கும் முயற்சி முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
பனை மரம் தமிழர்களின் சமூக பண்பாட்டு வாழ்வி லும், வரலாற்றிலும், பொரு ளியலிலும் 2,000 ஆண்டுக ளுக்கும் மேலாக தாக்கத்தை ஏற்படுத்தி வந்துள்ளது. இதனை தமிழக கடற்கரைப்ப குதிகளில் வளர்க்கும் முயற்சி முன்னெடுக்கப்பட்டு வருகிறது. மீனவர்கள் குடியிருப்பு கள், துறைமுகங்கள், உயிரி யல் பூங்கா, அரிய வகை மீன்கள், நீர்வாழ் உயிரினங் களை காக்கும் வகையிலும், இயற்கை சீற்றங்களின் பாதிப்புகளை குறைக்கும் வகையிலும், காலநிலை மாற்றத்தினை தணிக்கும் வகையிலும் ஒரு கோடி பனை விதைகளை பதிய மிட்டு பாதுகாக்கும் பணி களை தமிழக அரசு முன்னெடுத்து செய்து வருகிறது. இந்த பணிக்கு உதவி புரியும் வகையில் திருமங்க லம் அன்னை பாத்திமா கல்லூரி நாட்டு நல பணித் திட்டத்தின் சார்பாக திட்ட அலுவலர் முனியாண்டி தலைமையில் மாணவர்கள் சிந்து பைரவி, அனிதா, அக்குமாரி, அருந்ததி, பக வதி கண்ணன், மருது பாண்டி, தங்கராஜ், மணி கண்டன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட நாட்டு நலப் பணித்திட்ட மாணவ-மாணவிகள் கல்லூரிக்கு அருகில் அமைந்துள்ள ராயபாளையம் மற்றும் திறளி ஆகிய கிராமங்களுக்கு சென்று சுமார் 700-க்கும் மேற்பட்ட பனை விதைகளை சேகரித்தனர். அந்த விதைகளை கல்லூரி தாளாளர் எம்.எஸ்.ஷா மற்றும் பொருளாளர் சகிலா ஷா ஆகியோரின் ஆலோசனையின் பேரில் தமிழ்நாடு மாநில நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் முனைவர் செந்தில் குமார் மற்றும் மதுரை காமராசர் பல்கலைக்கழக நாட்டு நல பணித்திட்ட ஒருங்கிணைப் பாளர் முனைவர் பாண்டி ஆகியோரிடம் கல்லூரி நாட்டு நல பணித்திட்ட அலு வலர் முனைவர் முனி யாண்டி, முனைவர் சிங்க ராஜா ஆகியோர் முன்னிலையில் கல்லூரி முதல்வர் டாக்டர் அப்துல் காதிர் வழங்கினார். பனை விதைகளை பெற்றுக் கொண்ட மாநில நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் டாக்டர் செந்தில் குமார் மற்றும் மதுரை காம ராஜர் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் பாண்டி ஆகியோர் அன்னை பாத்திமா கல்லூரி நிர்வாகத்திற்கு பாராட்டு களை தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக