விழுப்புரத்தில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாசிஸ் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 500 பேர் கைது போராட்டத்தில் ஒருவர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 7 செப்டம்பர், 2023

விழுப்புரத்தில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாசிஸ் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 500 பேர் கைது போராட்டத்தில் ஒருவர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு

விழுப்புரம் ரயில் நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் திருப்பதியில் இருந்து விழுப்புரம் வழியாக புதுச்சேரி சென்ற ரயில் முன்பு மரித்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயற்குழு உறுப்பினர் ரவீந்திரன் தலைமையில் மத்திய பாஜக அரசின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த போக்கையும் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் மக்கள் விரோத போக்கையும் காலி பணியிடங்களை நிரப்பப்படும் விவசாய விளைபொருள்களுக்கு கட்டுப்படியாக விலையை வழங்காமல் தேசிய ஊரக வேலை திட்டத்தில் கூடுதல் நிதி வழங்காமல் புறக்கணித்து வரும் மத்திய பாஜக அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கோஷம் ப்பி ராயல் முன் நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அந்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட வேம்பு கிராமத்தைச் சேர்ந்த விக்கிரவாண்டி வட்ட குழு உறுப்பினர் அஞ்சா புளி திடீரென மயக்கம் ஏற்பட்டு ரயில் பாதையில் மயங்கி விழுந்தார் இதனால் பரபரப்பு ஏற்பட்டது உடனடியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது இதனை அடுத்து ரயில் மறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது அவர்கள் போராட்டத்தை கைவிட்டு செல்லும்படி போலீசார் அறிவுறுத்தியதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனை அடுத்து அரை மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு அவர்கள் 500 பேரை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் சிறையில் அடைத்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/