திருப்பூர் 4 பேர் கொலை விவகாரம்; இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய உறைவினர்களிடம் ஒப்படைப்பு. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 5 செப்டம்பர், 2023

திருப்பூர் 4 பேர் கொலை விவகாரம்; இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய உறைவினர்களிடம் ஒப்படைப்பு.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் கள்ளக்கிணறு பகுதியில் வீட்டு அருகே அமர்ந்து மது அருந்தியதை கண்டித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த உள்பட்ட நான்கு பேரை அறிவாளால் தலையில் வெட்டியும், கைகளை துண்டித்தும் கொடூரமான முறையில் கொலை செய்தது மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் உறவினர்கள் உடல்களை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். 

இந்த நிலையில் காவல்துறையினர் பேச்சு வார்த்தையில் கொலைகார கும்பலை கண்டுபிடிக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாகவும் நான்கு பேரும் உடல்களை பெற்று அடக்கம் செய்ய கேட்டுக்கொண்டதன் பேரில் நான்கு பேரின் உடல்களை அடக்கம் செய்ய உறவினர்கள் ஆம்புலன்ஸில் கொண்டு சென்றனர். குடியினால் குடித்தவர் குடும்பம் மட்டுமல்ல அடுத்தவர் குடும்பமும் உயிரை பலி கொடுக்கும் நிலைமை மிகவும் கவலைக்குரியதாகவே உள்ளது. 

மேலும் டாஸ்மார்க் கடைகள் அதிகாலையில் திறந்து வைத்து நள்ளிரவு வரை மது விற்பது என்பது யாராலும் தடுக்க முடியாத ஒரு நிலை உள்ளது. தமிழ்நாடு அரசு இரும்பு கரங்களைக் கொண்டு அடக்கினால் மட்டுமே இதுபோல அசம்பாவிதங்கள் நடக்காமல் தடுக்க முடியும் அதேபோல் அப்பாவிகளின் குடும்பம் நடுத்தெருவில் நிற்கும் நிலை இருக்காது , முற்றிலும் தீர்வு வேண்டும் என்றால் தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டு வர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் கூறுகின்றனர். 


- மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/