சந்திராயன் 3 நிலவின் தெந்துருவ நிலப்பரப்பின் வெற்றிகரமாக ஆய்வு மேற்கொண்டு விண்வெளி ஆராய்ச்சி வல்லுனர்களுக்கும், ஆதித்யா எல் ஒன் முயற்சி மேற்கொண்டு வெற்றி பெற ஆராய்ச்சியாளருக்கு வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள் தெரிவித்து விழுப்புரத்தில் நடைபெற்ற அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்சனர்கள் கூட்டமைப்பு சார்பில் தீர்மானம் நிறைவேற்றம் - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 3 செப்டம்பர், 2023

சந்திராயன் 3 நிலவின் தெந்துருவ நிலப்பரப்பின் வெற்றிகரமாக ஆய்வு மேற்கொண்டு விண்வெளி ஆராய்ச்சி வல்லுனர்களுக்கும், ஆதித்யா எல் ஒன் முயற்சி மேற்கொண்டு வெற்றி பெற ஆராய்ச்சியாளருக்கு வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள் தெரிவித்து விழுப்புரத்தில் நடைபெற்ற அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்சனர்கள் கூட்டமைப்பு சார்பில் தீர்மானம் நிறைவேற்றம்

விழுப்புரத்தில் உள்ள வி ஆர் பி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில்  இன்று அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்சனர்கள் கூட்டமைப்பு விழுப்புரம் மாவட்ட கிளை சார்பாக மாதாந்திர கூட்டம் அதன் மாவட்டத் தலைவர் சிவகுருநாதன் தலைமை வகித்தார் மாவட்ட துணைத் தலைவர் குக சரவண பவன் அவர்கள் முன்னிலை வகித்தனர் மாநில பிரதிநிதி கோபாலகிருஷ்ணன் அனைவரையும் வரவேற்றார் மாவட்ட செயலாளர் சேது விவேகானந்தன் தீர்மானங்களை முன்மொழிந்தார் மாவட்ட பொருளாளர் அரங்க கோவிந்தராஜ் வரவு செலவு கணக்கை படைத்தார்  இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன


மாவட்ட கிளை தேர்தல் சுமோமாக நடத்தி தேர்தல் ஆணையர் கடலூர் மாவட்ட தலைவர் சிவராமன் மற்றும் துணை தேர்தல் ஆணையர் கடலூர் மாவட்ட செயலாளர் ராமசாமி ஆகியோருக்கும் பார்வையாளராக கலந்து கொண்ட மாநில துணைத்தலைவர் ராமு சிதம்பரம் மற்றும் மாநில ஆய்வு குழு உறுப்பினர் துரைக்கண்ணு ஆகியோருக்கும் மாவட்ட கிளை சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர்

தேர்தலில் எந்த தடையின்றி போட்டி இல்லாமல் தேர்வு செய்ய தனது பொறுப்பை விட்டுக் கொடுத்து உதவிய மாவட்ட தலைவர் ஏ ஆர் பாண்டுரங்கன் அவர்களுக்கு நன்றி தெரிவித்ததோடு அவர் தொடர்ந்து இயக்கியத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு முழு ஆலோசனை வழங்கி சிறப்பிக்க மாவட்டத்தின் கிளை சார்பில் கேட்டுக்கொண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டன


புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட கிளைகளின் பொறுப்பாளருக்கு அனைத்து கிளைகளும் ஏக்க வளர்ச்சி கருத்தில் கொண்டு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அனைத்து கிளைகள் சார்பாக தீர்மானிக்கப்பட்டன அதில் உலக வரலாற்றில் இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சியில் சந்திராயன் 3 நிலவின் தென்துருவ நிலப்பரப்பின் வெற்றிகரமாக ஆய்வு மேற்கொண்டு விண்வெளி ஆராய்ச்சி வல்லுநூறுக்கும் அயராத பாடுபடும் பட்ட ஆராய்ச்சியாளருக்கும் மாவட்ட கிளை சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்தும் நன்றிகளை தெரிவித்தனர்.


மேலும் சூரிய மண்டலத்தை ஆய்வு மேற்கொள்ள ஆதித்யா L1 எல் ஒன் முயற்சியை மேற்கொண்டு வெற்றி பெறும் ஆராய்ச்சியாளருக்கு மாவட்ட கிளை சார்பில் வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டனர். மேலும் வருகின்ற 29ஆம் தேதி சேலம் மாவட்டத்தில் நடைபெறும் மாநில தேர்தலிலும் மாநில ஆண்டு பேரவை கூட்டத்திலும் அனைத்து கிளைகளின் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன


இந்தக் கூட்டத்தில் ஏராளமான மூத்த குடிமக்கள் மற்றும் பென்சனர்கள் கலந்து கொண்டனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/