நெமிலி அருகே பின்னாவரம் ஊராட்சியில் ரூ.37,00,000 லட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சிப் பணிகள் தொடக்கம்! - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 11 செப்டம்பர், 2023

நெமிலி அருகே பின்னாவரம் ஊராட்சியில் ரூ.37,00,000 லட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சிப் பணிகள் தொடக்கம்!

நெமிலி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பின்னாவரம் ஊராட்சியில் 2022-2023ஆம் நிதி ஆண்டிற்கான அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் பின்னாவரம் கிராமத்தில் புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டும் பணி ரூ.14,50,000/-, பின்னாவரம் கிராமத்தில் புதிய நெற்களம் அமைக்கும் பணி ரூ.8,00,000/-, சேந்தமங்கலம் கிராமத்தில் புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டும் பணி ரூ.14,50,000/- மேற்காணும் பணிகளுக்கு மொத்தம் ரூ.37 லட்சம் மதிப்பீட்டில் கட்டுவதற்கான பூமிபூஜை ஊராட்சி மன்ற தலைவர். மணிவண்ணன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. 


இதில் சிறப்பு அழைப்பாளராக நெமிலி ஒன்றிய பெருந்தலைவர். பெ.வடிவேலு அவர்கள் கலந்து கொண்டு திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய துணைப் பெருந்தலைவர். ச.தீனதயாளன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர். 


- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/