தேனி மாவட்டம் பெரியகுளம் நகர், ஒன்றிய, இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற 34 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா :ஊர்வலத்தை கொடியசைத்து துவைக்கி வைத்த ஓ.சண்முகசுந்தரம்:
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் பெரியகுளம் நகர், ஒன்றிய இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது.34 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவினை முன்னிட்டு பெரியகுளம் பாம்பாற்று ஆஞ்சநேயர் திருக்கோவிலில் இருந்து நகரின் முக்கிய வீதிகளில் மாபெரும் இந்து சங்கம் ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்திற்கு விநாயகர் சதுர்த்தி விழா குழு தலைவர் ராஜபாண்டி தலைமை தாங்கினார். இந்து முன்னணி மாவட்ட செயலாளர் விஷ்ணு ப்ரியன் ஒருங்கிணைப்பு செய்து, இந்து முன்னணி மதுரை கோட்ட செயலாளர் பாலன் சிறப்புரையாற்றினார்.பெரியகுளம் அஇஅதிமுக நகர் கழக துணை செயலாளரும், பெரியகுளம் நகராட்சி அஇஅதிமுக நகர் மன்ற உறுப்பினர்கள் குழு தலைவரும்,நகர மன்ற உறுப்பினருமான, மக்கள் சேவகன் ஓ. சண்முகசுந்தரம் மாபெரும் இந்து சங்கம் ஊர்வலத்தை (விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை) கொடியசைத்து துவக்கி வைத்தார்.விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொதுமக்கள் 2000 பேருக்கு உயர்தர சைவ உணவினை ஓ.சண்முகசுந்தரம் அன்னதானமாக வழங்கினார். இந்நிகழ்வில் இந்து முன்னணி மாநில, மாவட்ட, பெரியகுளம் நகர ஒன்றிய, நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக