வடமதுரை ஊராட்சியில் குகை நீர் நகல் மாஸ்டர் மைண்ட் பவுண்டேஷன் விருஷ்சம் மூலமாக 3000 தென்னை மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 17 செப்டம்பர், 2023

வடமதுரை ஊராட்சியில் குகை நீர் நகல் மாஸ்டர் மைண்ட் பவுண்டேஷன் விருஷ்சம் மூலமாக 3000 தென்னை மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி


வடமதுரை ஊராட்சியில்  குகை நீர் நகல் மாஸ்டர் மைண்ட் பவுண்டேஷன் விருஷ்சம் மூலமாக 3000 தென்னை மரக்கன்றுகள்  வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.


திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் வடமதுரை ஊராட்சிக்கு உட்பட்ட வடமதுரை பெருமாள் கோயில் அருகில்  குகைநீர் நகல் தனியார் நிறுவனமும் மற்றும் மாஸ்டர் மைண்ட் பவுண்டேஷன் விருஷ்சம் மூலமாக 3000 தென்னை மரக்கன்றுகள்  வழங்கும் நிகழ்ச்சி ஊராட்சி மன்ற தலைவர் காயத்ரி கோதண்டன் தலைமையில் நடைபெற்றது


2000 விவசாயிகளுக்கான வாழ்க்கை முன்னேற்றம் மற்றும் பசுமை ஏற்படுத்த  நோக்கத்துடன் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 
தென் மண்டல இயக்குனர் சோபியா பேர்வின், லெப்ட் அண்ட் கர்னல்
நா. தியாகராஜன், சமூக சேவகர் டி.கண்ணன் திவ்யா, ஒன்றிய குழு உறுப்பினர் ஜமுனாஅப்புன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பாக்கியலட்சுமி ரமேஷ் வார்டு உறுப்பினர்கள் 7- வது வார்டு உறுப்பினர் பா.ரமேஷ், 3 - வது வார்டு உறுப்பினர் சு.தமிழ் மன்னன், 4 - வது வார்டு உறுப்பினர் திவ்யா ராஜீவ்காந்தி, 5 - வது உறுப்பினர் பாலாஜி விவசாய சங்கத் தலைவர் 
ஆர்.டி.விஜய்பிரசாத், வடமதுரை தயாநிதி, பேட்டை மேடு படைக்கு அஞ்சான் பார்த்திபன்,‌ மல்லியங்குப்பம் த. ராஜேஷ், பேட்டைமேடு‌ எஸ்.வேதமுத்து, மற்றும் ராணுவ வீரர்கள் வடமதுரை ஊராட்சி செயலாளர் கல்பனா விஜயகுமார், மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தென்னை கன்றுகளை வாங்கி சென்றனர்


திருவள்ளூர் மாவட்ட செய்தியாளர்.க.கணபதி.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/