சிவகாசி அருகே, கடன் வாங்கித் தருவதாகக்கூறி பெண்ணிடம் 21 பவுன் நகையை அபகரித்த தம்பதி மீது வழக்கு. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 22 செப்டம்பர், 2023

சிவகாசி அருகே, கடன் வாங்கித் தருவதாகக்கூறி பெண்ணிடம் 21 பவுன் நகையை அபகரித்த தம்பதி மீது வழக்கு.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள, இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் மகேஸ்வரி (45). மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினராக உள்ள இவருக்கும், அதே குழுவைச் சேர்ந்த விளாம்பட்டி பகுதியைச் சேர்ந்த ஜுலியட்ராணி (40) என்பவருக்கும் நட்பு ஏற்பட்டது. சில மாதங்களாக பழகிய தோழி ஜுலியட்ராணியிடம், மகேஸ்வரி வீடு கட்டுவதற்காக வங்கி கடனுக்கு முயற்சி செய்து வருவதாக கூறியுள்ளார். 


அப்போது ஜுலியட்ராணி, தனது கணவர் சுந்தரமூர்த்திக்கு வங்கிகளில் நல்ல தொடர்பு உள்ளது, வீடு கட்டுவதற்கு அவர் வங்கி கடன் ஏற்பாடுகளை செய்து தருவார் என்று கூறினார். இதனை நம்பிய மகேஸ்வரி, தான் வங்கியில் அடகு வைத்திருந்த 18 பவுன் நகைகளை திருப்பி எடுத்ததுடன், தன்னிடமிருந்த 3 பவுன் தங்க நகையையும் சேர்த்து 21 பவுன் தங்க நகைகளை ஜுலியட்ராணியிடம் கொடுத்துள்ளார். 


ஆனால் அவர்கள் பேசியபடி வங்கி கடன் எதுவும் பெற்றுத் தரவில்லை. நகையை திருப்பிக் கேட்டதற்கு உரிய பதில் கூறாமல், அவரை மிரட்டியுள்ளனர். இது குறித்து மகேஸ்வரி, சிவகாசி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவின்படி, மோசடியில் ஈடுபட்ட தம்பதி மீது, சிவகாசி கிழக்கு காவல்நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/