காட்டுமன்னார்கோவில் அருகே கொக்குகள், உடும்புகளை வேட்டையாடிய இருவருக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை; 20 ஆயிரம் ரூபாய் அபராதம். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 8 செப்டம்பர், 2023

காட்டுமன்னார்கோவில் அருகே கொக்குகள், உடும்புகளை வேட்டையாடிய இருவருக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை; 20 ஆயிரம் ரூபாய் அபராதம்.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே சோழத்தரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அறந்தாங்கி கிராமத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு மூன்று உடும்புகள், 11 கொக்குகளை அப்பகுதியில் உள்ள வீராணம் ஏரிக்கரைகளில் வேட்டையாடி பொது மக்களிடம் விற்பனை செய்த  அரியலூர் மாவட்டம் குண்டவெளி கிராமத்தைச் சேர்ந்த சந்திரன் (43) பாபு (58) ஆகிய இருவர் மீது சிதம்பரம் வனத்துறையினர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதியப்பட்டு கைது செய்யப்பட்டனர். 

பின்னர் இது குறித்த வழக்கு நீதிமன்ற விசாரணை காட்டுமன்னார்கோவில் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில்  நடைபெற்று வந்தது. இந்நிலையில் வழக்கு விசாரணை முடிவில் மாவட்ட உரிமையியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி மணிகண்டன் தீர்ப்பு வழங்கினார். அதில் கொக்குகள், உடும்புகளை வேட்டையாடிய குற்றவாளிகள் இருவருக்கும் தலா 3 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 20 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. 

இதனையடுத்து இவர்கள் இருவரும் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/