அம்மன்புரத்தில் உள்ள வெங்கடேஷ் பண்ணையார் 20ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு காவல்துறை அதிகாரிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 24 செப்டம்பர், 2023

அம்மன்புரத்தில் உள்ள வெங்கடேஷ் பண்ணையார் 20ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு காவல்துறை அதிகாரிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அம்மன்புரத்தில் உள்ள வெங்கடேஷ் பண்ணையார் நினைவிடத்தில் வரும் 26.09.2023 அன்று நடைபெற உள்ள 20ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு 22.09.2023 அன்று தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் தலைமையில் காவல்துறை அதிகாரிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.


இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் நினைவு நாளில் நினைவு தினத்திற்கு அஞ்சலி செலுத்த வருபவர்கள் மற்றும் நிகழ்ச்சி அமைப்பாளர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து கீழ்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

  1. வெங்கடேச பண்ணையாரின் நினைவு நாள் நிகழச்சிகள் அனைத்தையும் 26.09.23ம் தேதி 06.00 மணிக்கு ஆரம்பித்து 18.00 மணிக்குள் முடித்துக் கொள்ள வேண்டும்.
  2. நினைவு நாள் அஞ்சலி செலுத்த வருவதற்கு இரு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாடகை (T. Board) வாகனங்களில் வருவதற்கு அனுமதி கிடையாது.
  3. நினைவு தினத்திற்கு அஞ்சலி செலுத்த வருபவர்கள் பேரூந்து மற்றும் அவர்களது தனியார் நான்கு சக்கர வாகனங்களில் வருவதற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
  4. நினைவு நாளின் போது பால்குடம் எடுத்து வருவதற்கு அனுமதி கிடையாது.
  5. மேற்படி நினைவு நாளின் போது அஞ்சலி செலுத்த வரும் நபர்கள் வாள் போன்ற ஆயதங்கள் கொண்டு வந்தால் இந்திய தண்டணை சட்டம் பிரிவு 153-ன் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.
  6. மேற்படி நினைவு நாளின் போது அஞ்சலி செலுத்த வரும் நபர்கள் அனுமதி வழங்கப்பட்ட சாலை/தெரு/பாதைகள் வழியாகத்தான் செல்ல வேண்டும்.
  7. மேற்படி நினைவு நாளின் போது அஞ்சலி செலுத்த செல்லும் போது சாலை/தெரு/பாதைகளில் உள்ள பொது மக்களுக்கோ, போக்குவரத்திற்கோ எந்தவித இடையூறும் செய்யவோ, மறிக்கவோ கூடாது.
  8. மேற்படி நினைவு நாளின் போது அஞ்சலி செலுத்த செல்லும் போது அதிகப்படியான ஒலி எழுப்பி பொது மக்களுக்கு இடையூறோ, மற்ற சாதி, மத உணர்வுகளை தூண்டும் வாசகங்களை சொல்லவோ, சாதி அடையாளங்களுடன் உடை (டீ-சர்ட்) அணிந்து வரவோ, பாடல்களை பாடவோ, ஒலி எழுப்பவோ கூடாது.
  9. காவல் துறை சட்டம் ஒழுங்கு மற்றும் போக்குவரத்து ஒழங்குபடுத்துதல் சம்பந்தமாக எடுக்கும் நடவடிக்கைகளுக்கு கட்டுப்பட்டு செல்ல வேண்டும்.
  10. காவல் துறையினர் அவ்வப்போது நடைமுறையில் இருக்கும் சட்ட திட்டம், சூழ்நிலைக்குட்பட்டு விதிக்கும் நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டு அதனை கடைபிடித்து ஒத்துழைப்பு தர வேண்டும்.
  11. மேற்படி நினைவு நாளின் போது அஞ்சலி செலுத்த செல்லும் போது எந்த பகுதியிலும் பட்டாசு, வான வேடிக்கை அல்லது வேறு எந்த ஒலி எழுப்புவதற்கோ, மனித உயிருக்கும். பொது உடமைக்கும் ஆபத்து விளைவிக்கும் அபாயகரமான பொருட்களையோ பயன்படுத்துதல் கூடாது எனவும் மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் தெரிவித்துள்ளார்.

இக்கூட்டத்தில் காவல் துணை கண்காணிப்பாளர்கள் தூத்துக்குடி சத்தியராஜ், திருச்செந்தூர் வசந்தராஜ், ஸ்ரீவைகுண்டம் மாயவன், காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் மற்றும் நினைவு தின நிகழச்சி அமைப்பாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/