திருச்செந்தூா் முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை 2கோடியே 93லட்சம் வருவாய்! - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 29 செப்டம்பர், 2023

திருச்செந்தூா் முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை 2கோடியே 93லட்சம் வருவாய்!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் 2கோடியே 93 லட்சம் வருவாய். உலக புகழ்பெற்ற அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் செப்டம்பர் மாத உண்டியல் காணிக்கை என்னும் பணி நடைபெற்றது.


இதில் அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன் திருக்கோயில் இணை ஆணையர் மு.கார்த்திக் உதவி ஆணையர் சங்கர் திருச்செந்தூா் ஆய்வர் செந்தில் நாயகி பதினெண் சித்தர் மடம் பீடம் குருகுலம் வேதபாடசாலை உழவாரப்பணிக்குழு, தூத்துக்குடி ஜெய மங்கள ஆஞ்சநேயர் உழவாரப்பணிக்குழு, பொதுமக்கள் பிரதிநிதி மோகன், அயல்பணி மற்றும் கோவில் பணியாளர்கள் முன்னிலையில் கோவில் பிரகாரத்தில் உள்ள வஸந்த மண்டபத்தில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது. 


இதில் நிரந்தர உண்டியலில் 2,76,88763 ரூபாயும்,  2023 ஆவணி திருவிழா தற்காலிக உண்டியலில் 25,520 ரூபாயும், மேலகோபுர திருப்பணி உண்டியலில் 875 ரூபாயும், கோசாலை பராமரிப்பு உண்டியலில் 19,711 ரூபாயும், யானை பராமரிப்பு உண்டியலில் 1,13,089 ரூபாயும், திருக்கோயில் அன்னதான உண்டியலில் 15,08,214 ரூபாயும், மேலகோயில் அன்னதான உண்டியலில் 15,113 ரூபாயும், நாசரேத் கோயில் அன்னதான உண்டியலில் 1135 ரூபாயும், கிருஷ்ணாபுரம் கோயில் அன்னதான உண்டியலில் 7432 ரூபாயும், மொத்தமாக ரூ.2,93,80032 ரூபாயும் வருவாய் கிடைத்துள்ளது. 


அது போக தங்கம் 2100 கிராமும், வெள்ளி 19000 கிராமும், பித்தளை 35000 கிராமும், செம்பு 4000 கிராமும், தகரம் 3000 கிராமும், அயல்நாட்டு நோட்டுகள் 424 ம் வருவாய் திருக்கோயிலுக்கு கிடைத்துள்ளதாக திருச்செந்தூா் திருக்கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/