வகுத்தான்குப்பம் தூய மத்தேயூ ஆலயத்தின் 104வது ஆலய பிரதிஷ்டை மற்றும் 34 வது அசன பண்டிகை. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 24 செப்டம்பர், 2023

வகுத்தான்குப்பம் தூய மத்தேயூ ஆலயத்தின் 104வது ஆலய பிரதிஷ்டை மற்றும் 34 வது அசன பண்டிகை.

CSI - தூத்துக்குடி நாசரேத் திருமண்டலம் நாசரேத் அருகே உள்ள வகுத்தான்குப்பம் தூய மத்தேயூ ஆலயத்தின் 104வது ஆலய பிரதிஷ்டை மற்றும் 34 வது அசன பண்டிகை விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. 18.09.2023 அன்று மாலை 7 மணிக்கு வாழ்க்கையில் வசந்தம் அன்றைய காலமா இன்றைய காலமா எனும் பட்டிமன்றம் தனபால் தலைமையில் நடைபெற்றது.


19 & 20.09.2023 ஆகிய இரு நாட்களில் மாலை 7 மணிக்கு ஆலங்குளம் எழுப்புதல் ஜெப ஊழியங்களை சேர்ந்த சகோ.டேனியல்‌ பீட்டர் ஆவிக்குரிய நற்செய்தி கூட்டங்களை நடத்தினார். 21.09.2023 அன்று ஆலய பிரதிஷ்டை பண்டிகை பரிசுத்த திருவிருந்து ஆராதரையுடன் துவங்கியது. தூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்தின் உப தலைவர் அருட்திரு VMS தமிழ் செல்வன் அவர்கள் தேவ செய்தி வழங்கினார்.


23.09.2023 சனிக்கிழமை அன்று அதிகாலை 5 மணிக்கு பரிசுத்த திருவிருந்து ஆராதனை உடன் அசனப் பண்டிகை ஆரம்பமானது. வகுத்தான்குப்பம் சேகர தலைவர் அருள்திரு ஹென்றி ஜீவானந்தம் தேவ செய்தி வழங்கினார். அன்று மாலை 6 மணிக்கு ஐக்கிய அசன வைபவம் நடைப்பெற்றது. நாசரேத் சுற்றுப்புறத்தைச் சார்ந்த சுமார் 8,000 த்துக்கும் அதிகமானோர் உணவருந்தி சென்றனர். 


24.09.2023 ஞாயிறு அன்று மாலை 7 மணிக்கு சபை மக்களின் சார்பில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றது. விழா ஏற்பாடுகளை சேகரத் தலைவர் ஹென்றி ஜீவானந்தம் தலைமையில் சபை ஊழியர் ஜாய்சன் மற்றும் சபை மக்கள் சிறப்பாக செய்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/