தூத்துக்குடி மாவட்டத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் வன்புணர்ச்சி செய்த வழக்கில் குற்றவாளிக்கு தூத்துக்குடி மகிளா நீதிமன்ற நீதிபதி மதிப்பிற்குரிய கனம் மாதவ ராமானுஜம் 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 5,000/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கடந்த 2017ம் ஆண்டு மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் வன்புணர்ச்சி செய்த செய்த வழக்கில் கோவில்பட்டி ஆலம்பட்டி பகுதியைச் சேர்ந்த அருள்ராஜ் மகன் ரகு (எ) ரகுராம் (30) என்பவரை கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து கைது செய்தனர். இவ்வழக்கை அப்போதைய கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஸ்டெல்லாபாய் புலன் விசாரணை செய்து கடந்த 09.10.2017 அன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தார்.
இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த கனம் நீதிபதி மாதவ ராமானுஜம் (29.09.2023) அன்று குற்றவாளியான ரகு (எ) ரகுராம் என்பவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 5,000/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஸ்டெல்லாபாய், குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் எல்லம்மாள் அவர்களையும், விசாரணைக்கு உதவியாக இருந்த பெண் முதல் நிலை காவலர் மகேஸ்வரி ஆகியோரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் பாராட்டினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக