வேலூர் மாவட்டம் குடியாத்தம் நடுப்பேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கடந்த 2019 ஆண்டு முதல் கொரோனா பேரிடர் காலகட்டத்திலிருந்து வாழ்வாதாரம் பாதித்த மாற்றுத்திறனாளிகள் திருநங்கைகள் விதவைகள் என்று மாதந்தோறும் 100 நபர்களுக்கு அரிசி பருப்பு சேமியா ரவை போன்ற நிவாரண பொருட்கள் 70 மாதம் வழங்கி தற்போது 71 வது மாதமாக இன்று வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு கேவி ராஜேந்திரன் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக குடியாத்தம் சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் ஜி. சரவணன் முன்னாள் நகர மன்ற உறுப்பினர் ஆர் மூர்த்தி குடியாத்தம் நகர லயன்ஸ் கிளப் (2023 -24) ஆண்டு தலைவர்தேர்வு ஜெ பாபு பொதுப்பணித்துறை ஒப்பந்தாரர் ஆர்.தயாளன் சமூக ஆர்வலர் கங்காதேவி ஆகியோர் கலந்து கொண்டு வறுமையில் வாடும் 80 பயணாளிகளுக்கு 5கிலோ அரிசி பருப்பு சமையல்எண்ணைய் உப்பு மஞ்சல்தூள் மிளகாய்தூள் உள்ளிட்ட மளிகை நிவாரண பொருட்கள் மற்றும் பள்ளி மாணவிக்கு நோட்டுப் புத்தகங்கள் வழங்கினார்கள் நிகழ்ச்சி ஏற்பாடுகளை சமூக ஆர்வலர் கேவி.ராஜேந்திரன் செய்திருந்தார்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக