வரலாற்று சிறப்புமிக்க முதலமைச்சரின் காலை உணவு திட்டம் துவக்க நாளில் சின்னாரம்பட்டி ஊராட்சி நாய்க்கனூர் நடுநிலைப்பள்ளிக்கு உயர்தர ஸ்மார்ட் போர்ட் (Smart Class) வழங்கிய A நல்லதம்பி MLA.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் தொகுதிக்குட்பட்ட கந்திலி ஒன்றியம் சின்னாரம்பட்டி ஊராட்சி நாய்க்கனூர் நடுநிலைப்பள்ளியில் ஐம்பெரும் விழா திருப்பத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் A நல்லதம்பி தலைமையேற்று சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பள்ளிக்கு சுமார் 2 இட்சம் மதிப்பீட்டில் Smartclass & Digital library (இணைய நூலகம்) திறந்துவைத்து, மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்களை வழங்கி விழா பேரூரை ஆற்றினார்.
சிறப்பு விருந்தினராக திருப்பத்தூர் மாவட்ட ஆட்சிதலைவர் திரு பாஸ்கரபாண்டியன் IAS அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். இவ்விழாவில் மத்திய ஒன்றிய செயலாளர், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் திரு KA குணசேகரன், சேர்மன் திருமதி, துணை சேர்மன் மோகன் அவர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் A S அமுதா, வட்டார கல்வி அலுவலர்கள் கலந்துகொண்டனர்.GWC நவின் அவர்கள் அனைவரையும் வரவேற்று சிறப்புசெய்தார் .
மேலும் ஊராட்சி மன்ற தலைவர் ஆசிரியர் M.சண்முகம், ஒன்றிய கவுன்சிலர் தாமோதரன், துணை தலைவர்தேவிகாமுருகன், முன்னாள் தலைவர் S.பச்சமுத்து, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணைஒருங்கிணைப்பாளர் Sமுரளிதரன், கல்வி வழிகாட்டிகுழு, முன்னாள் மாணவர்கள், பள்ளி மேலாண்மை குழு, பெற்றோர்கள், ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக