ஏழருவி பகுதியில் புதிய பகுதி நேர நியாய விலைக் கடையை திறந்த A நல்லதம்பி MLA
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி மற்றும் ஒன்றியத்துக்கு உட்பட்ட பொம்மிகுப்பம் ஊராட்சி,ஏழருவி பகுதி மக்கள் ரேஷன் பொருட்கள் வாங்க நீண்ட சுமார் 3.5 Km சென்றுவர வயதானவர்கள் முதியோர்கள் மற்றும் பெண்கள் மிகவும் சிரமமாக உள்ளதால் புதிய நியாய விலைக் கடை வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர் அவர்களிடம் கோரிக்கை வைத்தனர்.அந்த
கோரிக்கையை ஏற்று அதன் தொடர் முயற்சி மற்றும் பரிந்துரையின் அடிப்படையில், பொம்மிக்குப்பம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ் இயங்கும் ஏ கே மோட்டூர் கடையிலிருந்து பிரித்து ஏழருவி பகுதிக்கு,
மாவட்ட ஆட்சித் தலைவர்
திரு தெ பாஸ்கர பாண்டியன்
இ ஆ ப அவர்களின் தலைமையில்,
திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மக்கள் சேவகர் திரு A நல்லதம்பி MLA அவர்கள் பழத்தோட்டம் பகுதிக்கு புதிய பகுதி நேர நியாயவிலைக் கடையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றி பொதுமக்கள் பயன்பாட்டிற்காக துவக்கி வைத்து விழா பேரூரை ஆற்றினார்.
இந்த இனிய நிகழ்ச்சியில் அரசு சார்பில் கூட்டுறவு சார் பதிவாளர்கள் திரா.தர்மேந்திரன் மற்றும் மு. கோபிநாதன்,ஒன்றிய குழு உறுப்பினர் எம் ஜி காந்தி,முன்னாள் மாவட்ட கவுன்சிலர் அருணாச்சலம், ஒன்றிய அவைத் தலைவர் சி சின்னதம்பி,மாவட்ட பிரதிநிதி எம் ராஜேந்திரன் மற்றும் சரவணன், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் ஜெயகோபி,மாவட்ட ஆவின் பால் இயக்குனர் சின்னபையன்,ஒன்றிய நெசவாளர் அணி அமைப்பாளர் எஸ் சி விஜயகுமார், மற்றும் ரகு சாமுவேல்,தமிழரசன்,ஞானவேல், சாமன்னன்,விஜயரங்கன், அண்ணாமலை நாகரத்தினம் மற்றும் கிளைக் கழக நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
மாவட்ட செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக