திருப்பத்தூர் மாவட்டம் புதிய சாலை அமைத்திட பூமி பூஜை செய்த A நல்லதம்பி MLA. - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

சனி, 12 ஆகஸ்ட், 2023

திருப்பத்தூர் மாவட்டம் புதிய சாலை அமைத்திட பூமி பூஜை செய்த A நல்லதம்பி MLA.

AVvXsEgvuPK412xNw0iEDvu22Im5yc5B-split%20(1)
திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி, திருப்பத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஜவ்வாதுமலை நெல்லிவாசல் நாடு ஊராட்சி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாடு திட்டத்தின் (2022-23) கீழ், நெல்லிவாசல் நாடு கிராம சாலை 800m தூரத்திற்கு தார் சாலை அமைத்திட சுமார் 45.50 லட்சம் மதிப்பீட்டில் மாண்புமிகு திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் A நல்லதம்பி MLA அவர்கள் பூமி பூஜை செய்து பணியினை துவக்கி வைத்தார்.

AVvXsEgvuPK412xNw0iEDvu22Im5yc5B-split

இந்நிகழ்ச்சியில் அரசு‌ சார்பில் வட்டார வளர்ச்சி அலுவலர் கருணாநிதி,வட்டார உதவி பொறியாளர் முருகேசன், திருப்பத்தூர் ஒன்றிய குழு தலைவர் திருமதி விஜியா அருணாச்சலம், மாவட்ட கவுன்சிலர் சத்தியவாணி வில்வம், ஒன்றிய கவுன்சிலர்கள் திருமதி பிருந்தாவதி வைகுந்தராவு, துக்கன் ஒன்றிய பொருளாளர் செல்வம்,ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சின்னவேடி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வாசுதேவன்,டி கே அனுமன், ராமசாமி ஊர் நாட்டாமை ராதாகிருஷ்ணன், கிருஷ்ணன், வேடி, கல்வி குழு தலைவர் தாமோதரன், துக்கம், ராஜகோபால், பழனி மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் உடன் இருந்தனர்.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad