திருப்பூரில் குழந்தைகளுக்கு கர்ப்பிணி பெண்களுக்கும் விடுபட்ட தடுப்பூசி முகாம். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 9 ஆகஸ்ட், 2023

திருப்பூரில் குழந்தைகளுக்கு கர்ப்பிணி பெண்களுக்கும் விடுபட்ட தடுப்பூசி முகாம்.

குழந்தைகளுக்கு கர்ப்பிணி பெண்களுக்கும் விடுபட்ட தடுப்பூசி முகாம் வருகின்ற‌ ஆகஸ்ட் 12ஆம் தேதி செப்டம்பர் 11மற்றும் 16 ஆம் தேதி, அக்டோபர் 9 மற்றும்11 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. திருப்பூர் மாநகராட்சி நகர்ப்புற நல்வாழ்வு மைய கட்டிடத்தில் மருத்துவம் மற்றும் நல்வாழ்வுத்துறை பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பாக தீவிர மிஷன் இந்திர தனுஷ் தடுப்பூசி முகாம் 5 - O, - 2023 நடைபெற்றது. 



இந்த முகாமில் 5 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் கர்ப்பிணி தாய்மார்களுக்கும் விடுபட்ட தடுப்பூசி போடப்பட்டது. இந்த முகாமை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் இ.ஆ.ப., மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் ஜி. கிரியப்பனவர் இ.ஆ.ப., ஆகியோர் பார்வையிட்டனர்.


உடன் மருத்வத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். வருகின்ற ஆகஸ்ட் 12ஆம் தேதியும் செப்டம்பர் 11ஆம் தேதி 16ஆம் தேதி அக்டோபர் 9ஆம் தேதி 11ஆம் தேதியும் நடைபெறும் பொதுமக்கள் தாய்மார்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு விடுபட்ட தடுப்பூசி எடுத்துக் கொள்ளுமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர்.


- மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


Mini Popup Ad