கடலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை பெறுவதற்கு தங்கள் பகுதியில் நடைபெறும் மருத்துவ முகாமில் கலந்துகொள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண் தம்புராஜ் தகவல் - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 3 ஆகஸ்ட், 2023

கடலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை பெறுவதற்கு தங்கள் பகுதியில் நடைபெறும் மருத்துவ முகாமில் கலந்துகொள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண் தம்புராஜ் தகவல்

.com/img/a/

கடலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் மருத்துவ முகாம் மாதத்தின் முதல் புதன்கிழமை கடலூர் அரசு தலைமை மருத்துவமனையிலும் இரண்டாம் புதன்கிழமை அரசு காமராஜர் மருத்துவமனை சிதம்பரத்திலும் மூன்றாவது புதன்கிழமை அரசு பீங்கான் தொழில்நுட்ப கல்லூரி, விருத்தாசலத்திலும் நடைபெற்று வருகிறது.


கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் மாவட்டத்தில் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளும் அடையாள அட்டை வழங்கும் முகாமில் ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையில் மாற்றுத்திறனாளிகள் கலந்துகொள்கின்றனர். இதனால், அரசு தலைமை மருத்துவமனையில் முகாம் நடத்துவது மிகவும் சிரமமாக உள்ளது. இச்சிரமத்தினை குறைத்திடும் வகையில் சிதம்பரம் மற்றும் விருத்தாசலம் கோட்டங்களிலும் முகாம் நடைபெறுகிறது. எனவே அந்தந்த பகுதியை சார்ந்த மாற்றுத்திறனாளிகள் தங்கள் பகுதியில் நடைபெறும் மருத்துவ முகாமில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கிறார்.


மேலும் கலைஞரின் நூற்றாண்டு விழா கொண்டாடத்தினை ஒட்டி கடலூர் மாவட்டத்தில் 4 அடையாள அட்டை வழங்கும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்திட அரசு திட்டமிட்டுள்ளது. அடையாள அட்டை தேவைப்படும் மாற்றுத்திறனாளிகள் 19.08.2023 (சனிக்கிழமை) அன்று கடலூர் கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரியிலும் 26.08.2023 (சனிக்கிழமை) அன்று அரசு பீங்கான் தொழில்நுட்ப கல்லூரி, விருத்தாசலத்திலும் 16.09.2023 (சனிக்கிழமை) அன்று அரசு காமராஜர் மருத்துவமனை சிதம்பரத்திலும் 23.09.2023 (சனிக்கிழமை) அன்று குறிஞ்சிபாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் நடைபெறும் சிறப்பு முகாமில் கலந்துகொண்டு பயன்பெறுமாறும் இதுதொடர்பான கூடுதல் தகவலுக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர், அறை எண்.112, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், கடலூர் (தொலைபேசி எண்.04142 284415) அவர்களை தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் மருத்துவர்.அ.அருண்தம்புராஜ் தகவல்.


- கடலூர் செய்தியாளர் விஸ்வநாதன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad