திருச்சி மாவட்டம் துறையூர் உப்பிலியபுரத்தில் மலைநாடு பழங்குடியினர் மலைவாழ் மக்கள் விவசாயிகள் முன்னேற்ற சமூக சங்கம் சார்பில் உலக பழங்குடியினர் தினத்தை முன்னிட்டு மலைவாழ் மக்களின் மாநில மாநாடு பொதுக்கூட்டம் 09- 08-2023 புதன்கிழமை காலை 11 மணியளவில் உப்பிலியபுரம் தனியார் திருமண மண்டபத்தில் மலைநாடு விவசாயிகளின் போராளி பொ.பா.ராமசாமி நிறுவனர் தலைவர் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில் தமிழக மலைகளின் மேல் பழங்குடியினர் மலைவாழ் மக்கள் பரம்பரையாக செய்து வாழ்ந்து வரும் நிலத்திற்கு தனி பட்டா வழங்க கோரியும் பச்சைமலையில் வாழும் பழங்குடியினர் மலைவாழ் மக்கள் பகுதியை சேலம் திருச்சி பெரம்பலூர் ஆகிய மாவட்டமாக அரசு பதிவேட்டில் உள்ளதை ஒரே மாவட்டமாக திருச்சி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பச்சைமலை பகுதியை ஒரு ஒன்றியமாக அறிவிக்க கூறியும் உள்ளிட்ட 15 கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன இந்நிகழ்ச்சியில் 250க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் கலந்து கொண்டனர்.
மலைவாழ் மக்களின் போராளி பொ.பா.ராமசாமி தலைமை உரையாற்றினார். மாநிலத் துணைத் தலைவர் ஸ்ரீதர் சிறப்புரையாற்றினார். மாநில பொருளாளர் குப்புசாமி, இணைச் செயலாளர் பரமசிவம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாநாட்டு பொதுக்கூட்டத்திற்கு கலந்து கொண்ட திருச்சி, துறையூர், சேலம், கெங்கவல்லி, கள்ளக்குறிச்சி, தருமபுரி, அரூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் மற்றும் மலைவாழ் மக்கள் ஆகியோருக்கு தனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டார் பொ. பா.ராமசாமி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக