ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த விளாப்பாக்கம் பேரூராட்சியில் ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளர் ப.பிரபு என்கிற பிரபாகரன் கட்சி நிர்வாகிகள் மற்றும் இளைஞர்களை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார் இந்த ஆலோசனையின் போது பேரூராட்சி வார்டுகளில் உறுப்பினர்களை சேர்க்கவும் கட்டமைக்கப்படாத வார்டுகளில் திறன்பட செயல்படக்கூடிய புதிய நிர்வாகியை தேர்வு செய்து, உறுப்பினர்களை சேர்த்து கிளையை கட்டமைக்க வலியுறுத்தினார் மேலும் வருகின்ற ஆகஸ்ட் 17 தலைவரின் 61வது பிறந்த நாளை முன்னிட்டு அனைத்து வார்டு கிளைகளிலும் கட்சியின் கொடியை ஏற்றி வைத்து நலத்திட்ட உதவிகள் மற்றும் இரத்ததான முகாம்களை நடத்துவதற்கு ஆலோசனை வழங்கினார்.
நிகழ்ச்சியில் 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் இளைஞர்கள் கலந்து கொண்டனர் இந்த நிகழ்வின் போது கட்சியின் தலைமையிடத்து பொறுப்பாளர் ரமேஷ், மாம்பாக்கம் பாபு,கலவைப் பிரகாஷ்,ஆற்காடு ஆனந்தன், அரும்பாக்கம் ஆனந்தன் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக