தேனி மாவட்டம் சுதந்திர தினவிழாவில் மாவட்ட ஆட்சித்தலைர் திருமதி ஆர்.வி.ஷஜீவனா, இ.ஆ.ப., அவர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்து காவல் துறையினரின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றார். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 15 ஆகஸ்ட், 2023

தேனி மாவட்டம் சுதந்திர தினவிழாவில் மாவட்ட ஆட்சித்தலைர் திருமதி ஆர்.வி.ஷஜீவனா, இ.ஆ.ப., அவர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்து காவல் துறையினரின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றார்.


தேனி மாவட்டம் சுதந்திர தினவிழாவில் மாவட்ட ஆட்சித்தலைர் திருமதி ஆர்.வி.ஷஜீவனா, இ.ஆ.ப., அவர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்து காவல் துறையினரின் அணி வகுப்பு மரியாதையை ஏற்று சிறப்பாக பணியாற்றிய 205 அலுவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும் 56 பயனாளிகளுக்கு ரூ.26.13 இலட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை  வழங்கினார்.



தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் இன்று (15.08.2023) நடைபெற்ற சுதந்திர தினவிழாவில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆர்.வி.ஷஜீவனா, இ.ஆ.ப., அவர்கள் தேசிய கொடியை ஏற்றிவைத்து, மரியாதை செலுத்தி, காவல் துறை படைப்பிரிவுகளை பார்வையிட்டு அணிவகுப்பு மரியாதையை ஏற்று, சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுதாரர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்து, வண்ண பலூன்களை பறக்க விட்டு, சிறப்பாக பணியாற்றிய 205 அலுவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களையும் 56 பயனாளிகளுக்கு ரூ.26.13 இலட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை  வழங்கினார்.


மேலும், சிறப்பாக பணிபுரிந்த காவல்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை , செய்தி மக்கள் தொடர்புத்துறை, கால்நடை பராமரிப்புத் துறை, சமூகம் நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, பள்ளிக்கல்வித்துறை, மின்சார வாரியத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சார்ந்த அரசு அலுவலர்கள் மற்றும் சிறந்த தொழில் முனைவோர், சுற்றுச்சுழல் தன்னார்வளர்கள், வேளாண்மைத்துறையில் சிறந்த விவசாயிகள், முதல் தவல் அளிப்பவர்கள், திருநங்கை தன்னார்வளர், மாற்றுத்திறனாளி தன்னார்வளர், இளம் விளையாட்டு வீரர், சிறந்த பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம், சிறந்த வட்டாட்சியர் அலுவலகம், சிறந்த நகராட்சி அலுவலகம், சிறந்த பேரூராட்சி அலுவலகம், சிறந்த வட்டார வளர்ச்சி அலுவலகம், சிறந்த ஊராட்சி அலுவலகம் என மொத்தம் 205 நபர்களுக்கும் மற்றும் காவல் துறையை சேர்ந்த 31 நபர்களுக்கும் பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
 
    
அதனைத்தொடர்ந்து, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் மூலம் 22 பயனாளிகளுக்கு ரூ.4.80  இலட்சம் மதிப்பிலான இயற்கை மரண உதவித்தொகைக்கான ஆணைகளையும், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் அலுவலகத்தின் மூலம் 5 பயனாளிகளுக்கு ரூ.33,450 /- மதிப்பிலான தையல் இயந்திரங்களையும்,  மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மூலம் 5 பயனாளிகளுக்கு ரூ.30,355/- மதிப்பிலான தேய்ப்பு பெட்டி மற்றும் தையல் இயந்திரங்களையும், மாவட்ட மாற்றத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் 6 பயனாளிகளுக்கு ரூ.1.26  இலட்சம் மதிப்பிலான வங்கி கடனுதவிகளையும்,  வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலம் 3 பயனாளிகளுக்கு ரூ.1.14  இலட்சம் மதிப்பிலான வேளாண் உபகரணங்களையும், சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறையின் மூலம் 2 பயனாளிகளுக்கு மக்களைத்தேடி மருத்துவப் பெட்டகங்களையும், தாட்கோ அலுவலகத்தின் மூலம் 2 பயனாளிகளுக்கு ரூ.3.75 இலட்சம் மதிப்பிலான பயணியர் வாகனம் மற்றும் மர இழைப்பகத்திற்கான நிதியுதிவிகளை வழங்கினார்.  


மேலும், தோட்டக்கலைத்துறையின் மூலம் 7 பயனாளிகளுக்கு பசுமைக்குடில், சிப்பம் கட்டும் அறை, காய்கறி கல்தூண் பந்தல், காளாண் வளர்ப்பு அறை உள்ளிட்ட தோட்டக்கலை இயக்கத் திட்டத்தின் கீழ் ரூ.8.50  இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், முன்னாள் படைவீரர் நலத்துறையின் மூலம் 2 பயனாளிகளுக்கு ரூ.1 இலட்சத்திற்கான தொகுப்பு கல்வி உதவித் தொகைக்கான ஆணைகளையும், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறையின் மூலம் 1 பயனாளிக்கு விபத்து மரண உதவித் தொகை ரூ.5 இலட்சத்திற்கான காசோலை என 10 துறைகளின் சார்பில் 56 பயனாளிகளுக்கு ரூ.26.13  இலட்சம் மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.


பின்னர் 7 பள்ளிகளைச் சேர்ந்த 533-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவியர்கள் கலந்துகொண்ட 7 கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்டு, கலை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட மாணவ, மாணவியர்களுக்கு நினைவு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.சுதந்திர தினத்தை முன்னட்டு, சின்னமனூர் நகராட்சி மகாத்மா காந்தி திருவுருவசிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். 


இந்நிகழ்வுகளின் போது, பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் திரு.கே.எஸ்.சரவணக்குமார் அவர்கள், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.விவேகானந்தன்,  மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி இரா.ஜெயபாரதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் திருமதி பி.மதுமதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திருமதி சிந்து, மாவட்ட ஊராட்சி தலைவர் திருமதி க.ப்ரிதா, மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் திரு. பெ.ராஜபாண்டியன், சின்னமனூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் திருமதி அ.நிவேதாஅண்ணாத்துரை, சின்னமனூர் நகர்மன்றத் தலைவர் திருமதி ரா.அய்யம்மாள், வருவாய் கோட்டாட்சியர்கள் (பெரியகுளம்) திரு.த.முத்துமாதவன், (உத்தமபாளையம்) இரா.பால்பாண்டி மற்றும்  அனைத்துத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/