தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் வட்டார வள பயிற்றுநர்கள் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது - கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல் - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 9 ஆகஸ்ட், 2023

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் வட்டார வள பயிற்றுநர்கள் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது - கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் வட்டார வள பயிற்றுநர்கள் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது - மாவட்ட ஆட்சித்தலைவர் ஷ்ரவன் குமார் தகவல்.


கள்ளக்குறிச்சி மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் 1வட்டாரத்திற்கு தலா 1 நபர் வீதம் 9 வட்டாரத்திற்கு 9 வட்டார வள பயிற்றுநர், பணியிடத்திற்கு பணி நியமனம் செய்யப்படவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஷ்ரவன் குமார் தெரிவித்துள்ளார்.


மேலும், இப்பணிக்கு விண்ணப்பிக்க 31.07.2023 அன்று 25-45 வயது நிரம்பியிருத்தல் வேண்டும். குறைந்த பட்சம் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.  3 முதல் 5 வருடங்கள் வரை சுய உதவி குழு/ கூட்டமைப்புடன் பணியாற்றிய அனுபவம், சமுதாய பயிற்றுநர், வாழ்வாதார திட்ட அனுபவம், முன்னாள் வட்டார வள பயிற்றுநர்கள், இதர அரசுதுறை சார்ந்த பயிற்றுநர் (முன்னாள் வட்டார வள, பயிற்றுநர்களுக்கு அனைத்து காரணிகளையும் கருத்தில் கொண்டு) பணியில் முன்னுரிமை வழங்கப்படும். 


MS office தெரிந்து இருத்தல் வேண்டும். Android Mobile பயன்படுத்துதல் தெரிந்திருத்தல் வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நன்கு படிக்க, எழுத மற்றும் பேசவும் தெரிந்திருக்க வேண்டும். விண்ணப்பங்கள் வெள்ளைத்தாளில் தட்டச்சு செய்தோ அல்லது கையெழுத்து பிரதியாகவோ இணை இயக்குநர்/ திட்ட இயக்குநர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்,  கிராம ஊராட்சி சேவைமைய கட்டிடம், நிறைமதி (கிராமம்), நீலமங்கலம் (அஞ்சல்),  கள்ளக்குறிச்சி மாவட்டம் - 606 213. என்ற முகவரிக்கு 12.08.2023-ம் தேதி மாலை 5.00 மணிக்குள் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்பிவைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.


- தமிழக குரல் செய்தியாளர் - க.சமியுல்லா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/