கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நிலவில் சந்திராயன் வெற்றிகரமாக கால் பதித்தை தொடர்ந்து திருக்கோவிலூர் நகரில் பட்டாசு வெடித்து கொண்டாட்டம். - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

வியாழன், 24 ஆகஸ்ட், 2023

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நிலவில் சந்திராயன் வெற்றிகரமாக கால் பதித்தை தொடர்ந்து திருக்கோவிலூர் நகரில் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்.

.com/img/a/



இந்தியாவின் இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் 3 - விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவின் தென் துருவத்தில் திட்டமிட்டபடி இன்று மாலை 06:04 மணிக்கு துல்லியமாக தரையிறங்கியது. இதன் மூலம் விண்வெளித் துறையில் இந்தியா வரலாற்று சிறப்பு மிக்க சாதனையை பெற்று அசத்தி இருக்கிறது. இந்த வெற்றியை இந்தியா முழுவதும் உள்ள மக்கள், மாணவர்கள் கொண்டாடி வருகின்றனர்.



இதன் ஒருபகுதியாக கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் நகர் பகுதியில் உள்ள ஐந்து முனை சந்திப்பில்,  திருக்கோவிலூர் நகர் பகுதியில் வசிக்கும் தொழிலதிபரும் சமூக ஆர்வலருமான டி.ஜி.கணேஷ் தமிழ் மாநில காங்கிரஸ் கள்ளக்குறிச்சி மாவட்டத் தலைவர் தலைமையிலான இளைஞர்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக ஒரு மணி நேரத்திற்கு அதிகமாக பட்டாசுகள் வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad