பாராளுமன்றம் நோக்கி பேரணியாக செல்ல அகில இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு முடிவு.. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 7 ஆகஸ்ட், 2023

பாராளுமன்றம் நோக்கி பேரணியாக செல்ல அகில இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு முடிவு..


வேலூர் மாவட்டம் அகில இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின்(STFI) அகில இந்தியப் பொதுக்குழு(General council)முடிவின்படி தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களின் ஆசிரியப் பிரதிநிதிகள் பங்கேற்ற மூன்று நாட்கள் இயக்கப் பயிலரங்கு(STUDY CAMP)2023 ஆகஸ்ட் 4,5,6 தேதிகளில் மூன்று நாட்கள் சென்னையில் செயின்ட் தாமஸ் மவுண்ட்டில் உள்ள DMI அரங்கில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.  



புதிய பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தினையும் கல்வி கொள்கையினையும்  இரத்து செய்ய கோரி தோழமை அமைப்புகளுடன் இணைந்து பாராளுமன்றம் நோக்கி பேரணியாக செல்ல முடிவெடுத்துள்ளது.
இதுகுறித்து அகில இந்திய துணைத்தலைவரும் தமிழ்நாடு மாநில ஒருங்கிணைப்பாளருமான ச.மயில், செயற்குழு உறுப்பினர் மற்றும் தொழிற்கல்வி ஆசிரியர் கழக மாநிலத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.


இப்பயிலரங்கில் 120 பிரதிநிதிகள் பங்கேற்றனர். அரங்கின் முன்பு தேசியக் கொடியையும் கூட்டமைப்பின் கொடியையும்  அகில இந்தியத் தலைவர் கே.சி.ஹரிகிருஷ்ணன் அகில இந்தியப் பொதுச் செயலாளர் தோழர் சி.என்.பார்தி ஆகியோர் ஏற்றி வைத்தனர்.



அதனைத் தொடர்ந்து அகில இந்தியத் துணைத் தலைவரும், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளருமாகிய தோழர் ச.மயில் வரவேற்புரை ஆற்றினார். பயிலரங்கை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், புகழ்பெற்ற தொழிற்சங்கத் தலைவருமாகிய தோழர் டி.கே. ரங்கராஜன் தொடங்கி வைத்து பேசினார்.



முன்னாள் அகில இந்தியப் பொதுச் செயலாளர் கே.ராஜேந்திரன், பொருளாளர் தோழர்  P C.மொகந்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
பொருளாதார அறிஞர்,பேராசிரியர் தோழர்.வெங்கடேஷ் ஆத்ரேயா அகில இந்தியப் பொதுச் செயலாளர் தோழர் சி.என்.பார்தி கருத்துரை வழங்கினார்‌.
இரண்டாம் நாள்(05.08.2023) முதல் அமர்வில் பொதுப்பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச்செயலாளரும், கல்வியாளருமான தோழர்.பிரின்ஸ் கஜேந்திர பாபு  இரண்டாவது அமர்வில் கல்வியாளர், பேராசிரியை சந்திரா கருத்துரை வழங்கினார்கள். 



மூன்றாம் நாள்(06.08.2023) முதல் அமர்வில் கல்வியாளர் பேராசிரியர் தோழர். கருணானந்தம் இரண்டாவது அமர்வில் அகில இந்தியத் தலைவர் தோழர் கே.சி.ஹரிகிருஷ்ணன் ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள். 



பயிலரங்கின் நிறைவாக  அகில இந்தியச் செயலாளரும், தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளருமாகிய தோழர் அ.சங்கர் நன்றியுரை ஆற்றினார். 


தமிழ்நாட்டைச் சேர்ந்த  அகில இந்தியச் செயற்குழு உறுப்பினர்களான  தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் பொதுச்செயலாளர் சே.பிரபாகரன், தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் நிறுவனத் தலைவர் அ.மாயவன், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலத்தலைவர் மூ. மணிமேகலை, தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகத்தின் மாநிலத் தலைவர் செ.நா.ஜனார்த்தனன், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் பி.பேட்ரிக்ரெய்மாண்ட், தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழகத்தின் மாநிலத் தலைவர் எம்.ரவிச்சந்திரன், தமிழ்நாடு  உதவி பெறும் தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் கூட்டமைப்பின் துணைப் பொதுச் செயலாளர் சிவஸ்ரீ ரமேஷ், பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் கழகத்தின் மாநில தலைவர்  ட்டி.உதயசூரியன், பயிலரங்கு சிறப்பாக நடைபெற ஒருங்கிணைத்தனர்.
பணிக்குழுவின் ஒருங்கிணைப்பாளர்  சே.பிரபாகரன், இணை ஒருங்கிணைப்பாளர் கே.சத்தியநாதன், நிதிக்காப்பாளர் பக்தவச்சலம் இப்பயிலரங்கு மிகச் சிறப்பாக நடைபெற அனைத்துப் பணிகளையும் ஒருங்கிணைத்துச் செயல்பட்ட  பெ.அலோசியஸ் துரைராஜ் மற்றும் தன்னார்வலர்களாகச் செயல்பட்ட  எஸ்.முருகன், கே.விஜயகுமார், பெருமாள்சாமி, சுதாகர், வெங்கடேசன், பாபு சாஹிப், பெருமாள் பிள்ளை, பிரேமா உள்ளிட்டோரும், அரங்கின் பொறுப்பாளர் சாரதா ஆகியோரும் அகில இந்தியத் தலைவரால் கவுரவிக்கப்பட்டனர்.



புதிய பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தினையும் புதிய கல்வி கொள்கை 2020யினையும்  இரத்து செய்ய கோரி தோழமை அமைப்புகளுடன் இணைந்து செப்டம்பர் 13ஆம் தேதி பாராளுமன்றம் நோக்கி பல்லாயிரக்கணக்கானோர் பேரணியாக செல்வது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.



- வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/