செய்யாறு அருகே பேருந்து வசதி இல்லாததால் சரக்கு வாகனங்களில் பள்ளி மாணவிகள் ஆபத்தான முறையில் பயணம். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 17 ஆகஸ்ட், 2023

செய்யாறு அருகே பேருந்து வசதி இல்லாததால் சரக்கு வாகனங்களில் பள்ளி மாணவிகள் ஆபத்தான முறையில் பயணம்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த அம்மாபாளையம் கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. அம்மாபாளையம், செங்காடு, செங்காடு, தவசி, இருங்கல், கீழ்மட்டை, விளாநல்லூர், கிருஷ்ணாபுரம், கருவேல்பட்டு உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.


காலை நேரங்களில் பேருந்து வசதி உள்ளதால் பள்ளிக்கு எளிதாக மாணவ, மாணவிகள் வந்துவிடுகின்றனர். ஆனால், மாலை நேரங்களில் போதியளவு பேருந்து வசதிகள் இல்லை. இதனால், பள்ளியில் இருந்து வீடுகளுக்கு திரும்ப முடியாமல் மாணவ-மாணவிகள் அவதிப்படுகின்றனர். அவ்வழியாக இருசக்கர வாகனங்கள், சரக்கு வாகனங்கள், மாட்டு வண்டிகளில் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.


இதில், சரக்கு வாகனங்கள் நிரம்பி வழிய, மாணவிகள் தொங்கிக்கொண்டு செல்லும் பரிதாப நிலை உள்ளது. மேலும், சரக்கு வாகனம் உள்ளே இடம் இருந்தும், தொங்கிக்கொண்டு பயணிக்கும் சாகச பயணத்தை மாணவர்களை போன்று மாணவிகளும் விரும்புகின்றனர். ஒரு கையில் பிடித்துக்கொண்டு பயணம் செய்யும் மாணவிகளும் உள்ளனர்.


வாகனத்தில் தொங்கிக்கொண்டு பயணிக்கும்போது ஏற்படும் ஆபத்தை மாணவிகள் உணரவில்லை. சரக்கு வாகனத்தின் உள்ளே செல்லுமாறு, அவ்வழி யாக சென்ற இரு சக்கர வாகன ஓட்டிகள் எச்சரித்தும், மாணவிகள் அலட்சியப்படுத்துவது வாடிக்கையாக உள்ளது. ஆபத்தான பயணத்தை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு அறிவுரை வழங்குவதுபோல் மாணவிகளுக்கும் ஆசிரியர்களும் அறிவுரை களை வழங்க வேண்டும்.


மேலும், பெற்றோரும் மகள்களின் செயல்களை கண்காணித்து, தவறு களை திருத்திக்கொள்ள அறிவுரை வழங்கவேண்டும். இதேபோல், மாணவ-மாணவிகளின் எண்ணிக் கைக்கு ஏற்ப அரசுப் பேருந்துகளை இயக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகும்.


- செய்யாறு செய்தியாளர் MS.பழனிமலை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/