ஜெகதளா சாலையில் சாகசம் செய்யும் வாகனஓட்டிகள், என்ன செய்கிறது பேருராட்சி நிர்வாகம் பாவம் மக்கள், நீலகிரி மாவட்டம் குன்னுார் அருவங்காடு - ஜெகதளா சாலை மிகவும் பழுதடைந்துள்ளதால் வாகனங்களை ஓட்டி செல்ல சிரமம் ஏற்படுகிறது.
ஜெகதளா பேரூராட்சிக்கு உட்பட்ட அருவங்காடு - ஜெகதளா சாலை சீரமைக்கப்பட்டு பல மாதங்கள் போய் பல ஆண்டுகள் ஆகிவிட்டன 5 ஆண்டுகளுக்கு முன் 1கோடியோ 20 லட்சம் செலவில் போடப்பட்ட சாலை இது எந்த பராமரிப்பும் செய்யாததால் அனைவரையும் பயமுறுத்தும் சாலையாக தற்போது மாறி உள்ளது, இந்நிலையில், சாலையின் நடுவே தோண்டப்பட்ட குழிகளும் சரிவர மூடப்படாமல் விடப்பட்டுள்ளது.
இவ்வழியாக செல்லும் மினிபஸ்கள், கனரக வாகனங்கள் முதல் சிறிய வாகனங்கள்வரை செல்லவே முடியாமல் சிரமபடும் நிலை காணப்படுகிறது
இவ்வழியாக பைக்கில் வருபவர்கள் கீழே விழுந்து குழியில் சிக்கி தவிக்கும் நிலை தொடர்கிறது
குன்னுார் அருவங்காடு--ஜெகதளா சாலை பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாததால் பாலாஜிநகர், காந்திநகர், ஒசட்டி, ஜெகதளா, காரக்கொரை, ஓதனட்டி கிராமங்களுக்கு செல்லும் முக்கிய சாலையில், வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது, மாறாக பல பகுதியில் பேரூராட்சி நிர்வாகம் நல்ல நிலையில் இருக்கும் சாலைகளைப் பெயர்த்தெடுத்து புதிய சாலை அமைக்கிறது என இப்பகுதிமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
பேருராட்சி நிர்வாகத்தினர் அவர்களின் சொந்த வாகனத்தில் இந்த சாலையில் செல்வார்களா என கேள்வி எழுப்பினர் ஜெகதளா பேரூராட்சி நிர்வகம் இந்த சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டியது அவசியம் பேருராட்சி சார்பில் இந்த சாலை பணிக்காக டெண்டர்விடப்பட்டு உள்ளது நிதி பற்றா குறையால் பணி துவங்காமல் உள்ளதாகவும் கூறினர்
- தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக