எனது மண் எனது தேசம் திட்டத்தின் அனைத்து ஊராட்சிகளையும் மரக்கன்றுகள் நடைபெற்று வருகின்றன இதன் நிகழ்வு நிறைவு பெற்றது - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 16 ஆகஸ்ட், 2023

எனது மண் எனது தேசம் திட்டத்தின் அனைத்து ஊராட்சிகளையும் மரக்கன்றுகள் நடைபெற்று வருகின்றன இதன் நிகழ்வு நிறைவு பெற்றது

இந்திய அரசு கடலூர் மாவட்ட நேரு யுவ கேந்திராவின் சார்பில் என் மண் என் தேசம் என்ற திட்டத்தின் அடிப்படையில் ஆகஸ்ட் மாதம் 9ம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 15 ம் தேதி வரை இந்த திட்டத்தின் அடிப்படையில் கடலூர் மாவட்டத்தின் 683 ஊராட்சிகளிலும் உள்ள நேரு யுவ கேந்திரா இளைஞர் மன்றங்கள், அங்கன்வாடி மையங்கள், நீர்நிலை ஓரங்களில், அரசு அலுவலகங்களில்,பள்ளி,கல்லூரி வளாகங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டது.


இந்த எனது மண், என் தேசத்தின் மரக்கன்று நடுதல் நிறைவு விழா கடலூர் பாதிரிக்குப்பம் ஊராட்சியில் அய்யனார் கோவில் திடலில் நடைபெற்றது மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகின் மாவட்ட மேற்பார்வையாளர் கதிரவன் வரவேற்புரை ஆற்றினார் மாவட்ட இளையோர் ஒருங்கிணைப்பாளர் தெய்வசிகாமணி தலைமை தாங்கினார். கூடுதல் ஆட்சியர் மதுபாலன், உதவி இயக்குனர் ஊராட்சி பாதிரிகுப்பம் ஊராட்சி மன்ற தலைவர் ஜல்லி சரவணன் முன்னிலை வகித்தனர்.


இதில் சிறப்பு விருந்தினராக கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் கலந்துகொண்டு மரக்கன்றுகள் நட்டு பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினார் மேலும் என் மண் என் தேசம் என்ற திட்டத்தின் ஐந்து அம்ச உறுதிமொழி மாவட்ட ஆட்சியர் தலைமையில் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கடலூர் அரசு தலைமை மருத்துவமனை மருத்துவர் ஸ்ரீதரன் தேசிய இளையோர் தொண்டர்கள் ஜெயராஜ் ,ராமலிங்கம், ராம்குமார், பல்நோக்கு பணியாளர் வித்யா லட்சுமி, இளம் கடலூர் வனிதா, சமூக ஆர்வலர் முகமது, கிருபாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் நிறைவாக நேரு யுவ கேந்திராவின் முன்னாள் நிர்வாக உதவியாளர் ராமமூர்த்தி நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/