ஊத்தங்கரை தொகுதியில் நிம்மதி அடைவார்களா பெண்கள் ?
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் ஏற்படும் குற்றச்சாட்டுகளை வெளிப்படுத்த முடியாத நிலையில் பல சமயம் காவல்துறையினர் ஒத்துழைப்பு இல்லாமல் இருப்பது நிருபர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலை உள்ளது .
கடந்த 2020 ஆம் ஆண்டு சரட்டூரில் கொலை செய்யப்பட்ட பூசாரியை கொலை செய்த குற்றவாளிகளை இதுவரை ஒருவரையும் கண்டுபிடிக்கமுடியாத நிலையில் காவல்துறை தவித்து வரும் அவல நிலையில்,
சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் இருக்கக்கூடிய
கவுத்துகாரன்கோட்டை பகுதியில் நேற்று அதிகாலை இளம் பெண்ணை (வயதில் சிறு கோளாறு) பலாத்காரம் செய்ய முயற்சி செய்த வழக்கு பதின் காலதாமதம் ஆகிய வெளிச்சத்திற்க்கு வந்தது நிருபர்களுக்கு அதிர்ச்சி (மூன்று மணிநேரம் காத்திருந்த நிருபர்களுக்கு பெண் தானாக கவிழ்ந்து தலையில் காயம் ஏற்பட்டதாக தகவல் கொடுத்தது)
ஏற்படுத்தி உள்ளது.
மேலும் தற்போது போச்சம்பள்ளியில் இயங்கிக் கொண்டிருக்க கூடிய ஓலா மற்றும் காலணி தயாரிப்பு தொழிற்சாலையும் சுமார் 15,000 மேற்பட்ட ஊழியர்கள் இருசக்கர வாகனத்தில் இரவு பகலாக பயணிக்கும் சாலையாக கருதப்படக் கூடிய வீரியம்பட்டி கூட்ரோடு முதல் ஓலைப்பட்டி வரை இரவு நேர ரோந்து பணியில் காவலர்கள் இல்லாததால் இது போன்ற அசம்பாவிதங்கள் நடக்க எதுவாக இருக்கும். இதனை தங்கள் வசதிக்காக கருதி அப்பகுதியில் பலர் கைவண்ணம் காட்டி வருவது வெளிச்சத்திற்கு வராமல் அணைக்கப்படும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
என சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர்.
காவல்துறை சார்பில் இந்திய ஜனநாயக சட்டத்தின் அடிப்படையில் இ.பி.கோ 541, 323 ,324 ,354, என வழக்கு பதிந்து அதனை மாலையில் தகவல் பதிவிடும் காவல்துறையினர்
அவர்கள் சார்பில் மறுநாள் காவல் துறையின் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்த பணியும், ஊத்தங்கரை துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் குற்றப்பிரிவில் பணியாற்றக் கூடிய காவலர்களும் ஆய்வு மேற்கொண்ட ஆய்வும் நிருபர்களை தவிர்க்க விரும்பியதும் மறைமுகத்தில் செயல்பட்டது போல் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. என சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர்
கிருஷ்ணகிரி மாவட்ட செய்தியாளர்
எஸ் சத்தியநாராயணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக