நிலவில் தரைஇறங்கிய விக்ரம் லேண்டரில் நாசரேத்தில் தயாரிக்கப்பட்ட உதிரி பாகங்கள்! - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 26 ஆகஸ்ட், 2023

நிலவில் தரைஇறங்கிய விக்ரம் லேண்டரில் நாசரேத்தில் தயாரிக்கப்பட்ட உதிரி பாகங்கள்!

நாசரேத், நிலவில் தரை இறங்கிய விக்ரம் லேண்டரில் நாசரேத்தில் தயாரிக்கப்பட்ட உதிரி பாகங்கள் இடம்பெற்று இருப்பது தெரியவந்து உள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது. இதை நாடு முழுவதும் மக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள்.


அதேநேரத்தில் அரசியல் கட்சியினரும், இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள். அது போல் உலக நாட்டு தலைவர்களும் இந்தியாவுக்கு வாழ்த்துகளை தெரிவித்து உள்ளனர்.


இந்த சூழலில் சந்திரயான் -3 விண்கலத்தின் விக்ரம் லேண்டரில் பயன்படுத்தப்பட்ட சில உதிரி பாசுங்கள் தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தில் தயாரிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. அதாவது, லேண்டரில் லேசர் தொழில்நுட்பத்தில் இயங்கக்கூடிய LPG பிளேட் மற்றும் உதிரி பாகங்கள் பொருத்தப்பட்டுள்ளது. இவை அனைத்தும் நாசரேத்தில் இயங்கும் ADVANCED ART INDUSTRIAL TRAINING CENTRE ஊழியர்களால் தயாரிக்கப்பட்டதாகும்.


இதனால் அதன் நிர்வாகத்தினர், ஊழியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். அவர்களுக்கு பொதுமக்கள் பாராட்டுகளையும் தெரிவித்து வருகிறார்கள்.


- தமிழக குரல் செய்திகளுக்காக Vn சரவணன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/