மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே சாணம்பட்டியில், தமிழ்நாடு மண்புழு உர உற்பத்தியாளர் சங்க 25 வது ஆண்டு விழா நடந்தது. இந்த விழாவுக்கு சிவசாமி தலைமை தாங்கினார். இதில் புதிய நிர்வாகி தேர்வு நடந்தது.
தலைவராக பழனிச்சாமி, செயலாளராக பாலசுப்பிரமணி பொருளாளராக சிவசாமி, ஆலோசகராக பாரி, சட்ட ஆலோசகராக மாரிச்சாமி மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் ஏக மனதாக தேர்வு செய்யப்பட்டனர். இந்த விழாவில், மதுரை, திண்டு க்கல்,தேனி, ஈரோடு உள்பட பல மாவட்டங்களில் இருந்து, ஏராளமான மண்புழு உர உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் சங்க செயலாளர் பாலசுப்பிரமணியம் நன்றி கூறினார்.
மண்புழு உரம் பயன்பாடு, மண்புழு உரம் தயாரிக்க, அரசு என்ன உதவி செய்யவேண்டும், மண்புழு உற்பத்தியாளராகளின் இன்றைய நிலை என்ன என்பது குறித்தும் கூட்டத்தில், விவாதிக்கப்பட்டது. மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பகுதியில் மண்புழு மூலம் உரம் தயாரிக்கும் பணியானது முழூ வீச்சில் நடைபெற்று வருகிறது. பலரும், இந்த உரத்தை விரும்பி வாங்கிச் செல்வதாக, உர உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக