கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நந்திவரம்கூடுவாஞ்சேரி எம். கே .டி. மஹாலில் .நடைபெற்ற கண் பரிசோதனை முகாம். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 27 ஆகஸ்ட், 2023

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நந்திவரம்கூடுவாஞ்சேரி எம். கே .டி. மஹாலில் .நடைபெற்ற கண் பரிசோதனை முகாம்.

செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம் நந்திவரம்_கூடுவாஞ்சேரி  உட்பட்ட எம் கே டி தனியார் திருமண மண்டபத்தில் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நந்திவரும் கூடுவாஞ்சேரி நகர திமுக சார்பில் இலவச கண் பரிசோதனை மற்றும் சிகிச்சை முகாமை நடைபெற்றது.


காஞ்சி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம், செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன், நந்திவரம் கூடுவாஞ்சேரி நகர் மன்ற தலைவர் எம் கே டி கார்த்திக் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு இலவச கண் சிகிச்சை மற்றும் பரிசோதனை முகாமை தொடங்கி வைத்தனர்.


மேலும் இந்த நிகழ்ச்சியில் நந்திவரம் கூடுவாஞ்சேரி  நகர் மன்ற துணைத் தலைவர் ஜி கே லோகநாதன், ஜிஜீ ( எ)  ஜிஜேந்திரன், நகர் மன்ற உறுப்பினர்கள் திவ்யா, டி சதீஷ் குமார், ஜெயந்தி ஜெகன், சசிகலா செந்தில்,மற்றும் திமுகவின் முன்னணி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.


இலவச கண் பரிசோதனை மற்றும் சிகிச்சை முகாமில் நந்திவரம் கூடுவாஞ்சேரி நகராட்சிக்கு உட்பட்ட நூற்று ஐம்பதற்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். இந்த இலவச கண் பரிசோதனை மற்றும் சிகிச்சை முகாமில் கண்புரை நோய் கிட்ட பார்வை தூரப்பார்வை மற்றும் கண் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.


இந்த முகாமில் தீபம் மருத்துவமனை நிர்வாகிகள் நாகேஷ் சரவணன் ஜெய்சர் யுகந்தர் உள்ளிட்ட நிர்வாகிகளும் மருத்துவ உதவியாளர்களும் பங்கேற்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/