ஊத்தங்கரை CAK பெட்ரோல் பங்க் எதிரில் பாண்டிச்சேரி போக்குவரத்து கழக பேருந்தின் எஞ்சின் எரிந்தது பேருந்தில் 15 பயணிகள் மட்டுமே இருந்ததால் எவ்வித உயிர் சேதம் இன்றி தப்பித்தனர் ஊத்தங்கரை தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயணைத்தனர்.
ஊத்தங்கரை சிஎஸ்கே பெட்ரோல் பங்க் எதிரில் பாண்டிச்சேரி போக்குவரத்து கழக பேருந்து எஞ்சின் தீ பிடித்தது, கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை CAK பெட்ரோல் பங்க் எதிரில் பெங்களூரில் இருந்து பாண்டிச்சேரி நோக்கி சென்று கொண்டு இருந்த பாண்டிச்சேரி போக்குவரத்து கழக பேருந்தின் எஞ்சின் தீப்பிடித்தது.
இந்த தீயில் பேருந்தில் பயணம் செய்த 15 பயணிகள் எவ்வித காயம்மின்றி தப்பினர். தகவலறிந்து ஊத்தங்கரை தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். தீ பரவாமல் தடுத்தனர். தீ எப்படி ஏற்பட்டது என்பது குறித்து தீயணைப்புத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கிருஷ்ணகிரி மாவட்ட செய்தியாளர் எஸ் சத்திய நாராயணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக